பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 置给盈 தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர்* என்று பரிகசிப்பர். புலால் பிறிதோர் உடம்பின் புண் (257) என்ற வள்ளுவர் கருத்தும் ஈண்டு நினைக்கத்தக்கது. ஊன் உண்டாகும் நெஞ்சில் அருள் கெடாமல் வாழ முடியாதா? என்று வினவலாம். ஊன் உண்பதில் சுவை கண்டு பழகி விட்டால் மனத்திற்கு வளர்ச்சி இல்லை. அந்த மனம் மற்றோர் உயிரைக் காணும்போது அருளுணர் வோடு எண்ண முடியுமா? அதன் உடம்பையும் உண்ண வேண்டும் என்ற சுவையுணர்வுதான் பிறக்கும். ஆதலால் அவ்வாறு உண்டவர் மனம் நல்ல எண்ணம் எண்ணாது; கொலைக்கருவியைக் கையில் தாங்கியவரின் மனம் கொலையைத் தவிர்த்து நல்லதை எண்ண முடியுமா? ஊன் உண்டவரின் மனமும் அப்படிப்பட்டதே. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் (253) என்பது வள்ளுவர் பெருமானின் வாய்மொழி. சிலர் புலால் உண்பதற்குப் போலிக் காரணங்கள் சிலவும் கற்பித்துக் கொள்வர். நேரில் உயிர்களைக் கொன் றால் தானே பாவம்? யாரோ கொல்கின்றனர்; அதனால், தின்பதனால் உயிர் இரக்கக்குணம் கெடுவதில்லை’ என்பர். இதற்கு வள்ளுவரே மறுமொழி தருவார். ஊன் தின்பவர் இல்லையானால், கொல்வாரும் இரார். ஆகவே, தின்பது கொலைக்குக் காரணமாகின்றது; அது குற்றமேயாகும். தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் (256) என்பது வள்ளுவர் வாக்கு. AASAASAASAASAASAASAASAAAS 145. அறநெறிச்சாரம் - 162. த. இ. அ-11