பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6.2 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை மற்றொரு காரணம் சொல்லுகிறவர்களும் உண்டு. வேள்வி முதலியவற்றைச் .ெ சப்து வா : க் ைக யி ல் சிறப்புப் பெறுவதைவிட, புலால் உண்ணாத நோன்பால் பெறும் சிறப்பு மேலானது. நெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிட, ஒர் உயிரைக் கொன்று புலால் உண்ணாமல் வாழ்வது நல்லது. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று (259) என்று கூறுவர் பொய்யாமொழியார். கொல்லாமல், புலால் உண்ணாமல், வாழ்கின்றவன் எல்லா உயிரும் கைகூப்பித் தொழக்கூடிய சிறப்பைப் பெறுவான், கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) என்று முத்தாய்ப்பாகக் கூறுவர் வள்ளுவப்பெருந்தகை. இந்த இயலில் வரும் சில குறிப்புகளைக் கவனமாகக் கருத்தில் இருத்துவது நன்று. செல்வர்கள் பொருட் செல்வத்தை எப்படிப் பாதுகாத்து மேலும் மேலும் பெருக்கு கின்றார்களோ அப்படி அருட்செல்வத்தையும் இழப்பில் லாமல் பாதுகாத்து மேம்படுத்திக் கொள்ளவேண்டும். ஊன் உண்பது அருட்செல்வத்தைக் குறைக்கின்றது. ஒரு சமயம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சொன்னார்: புலால் மறுத்தல் துறவற இயலில் சொல்லப்பெற்றுள்ளது. ஆதலால் துறவிகள் இதனை செயலுரிமை ஆணை (Mandatory) யாகக் கொண்டு புலால் உண்ணக் கூடாது. இல்லற வியலில் இது கூறப்பெறாததால் இதனைப் பரிந்துரை யாகக் (Recommendatory) கொண்டு இல்லறத்தார் உண்ண லாம் என்றார். வள்ளுவர் மறையில் அறம் ஊடுருவி நிற்ப தால் எவரும் உண்ணக் கூடாது என்பதே கொள்ளத்