பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1 63 தக்கது. நிதிபதி சொன்னது வள்ளுவர் கருத்துக்கு முர்ணானது; சிறிதும் ஒவ்வாதது. என் கருத்துக்கு அற நெறிச் சாரத்திலுள்ள கருத்து அரணாக அமைகின்றது. கொன்றுான் நுகரும் கொடுமையை உள்நினைந்து அன்றே ஒழியவிடுவானேல்.-என்றும் இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்கு உள்ளே படுத்தானாந் தன்னைத் தவம்' (நுகரும்-உண்ணும்; கொடுமை-தீச்செயல்; உள்மனம்; என்றும்-எக்காலத்தும்! கொல்லும் தீச்செயலை நினைந்து ஒருவன் புலாலுண்ணலை முற்றிலும் தவிர்ப்பானேயானால் அவன் இல்லறத்தானா யினும் துறவற நெறியினின்று தவம் செய்வாரை நிகர்ப்பன் என்பது இதன் கருத்து. 3. தவம்: புலால்மறுத்தவரே தவத்திற்குரியவர். தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளல், மற்ற உயிர் கட்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய அவ்வளவே தவத் திற்கு உருவம். - - உற்றநோய் நோற்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (261) என்று இரத்தினச் சுருக்கமாகத் தவத்தை விளக்குவர் வள்ளுவப் பெருந்தகை. இந்த அளவில் அமையாமல் சிலர் 'தவக்கோலம்’ என்று தனியே தேடிக் கொள்கின்றனர். ஆனால் அந்தக் கோலம் மட்டிலும் இருந்தால் போதாது. தவக்கோலமும் தவ ஒழுக்கம் உடையவர்கட்கு மட்டி லுமே பொருந்தும்; மற்றவர்கள் அதனை மேற்கொள் வது வீண். தவமும் தவமுடையார்க்கு ஆகும்; அவம் அதனை அஃதிலார் மேற்கொள் வது (262) என்பது வள்ளுவம். 146, அறநெறிச்சாரம்-101