பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை சிலர் தவம் என்னும் பெயரால் பசியை அடக்கல், பல நாள் பட்டினி கிடத்தல், வெயிலிலும் மழையிலும் காட் டிலும் மேட்டிலும் கிடத்தல் முதலிய துன்பங்களை உட லுக்குத் தாமே வருவித்துக் கொள்ளல் என்ற முறைகளே தவம் என்று கருதுவர். இது தவறு; இப்போக்கு நம் நாட்டிற்கு உரியதும் அன்று. இம் முறை திருவள்ளுவர்க்கு, இணக்கமில்லாதது. காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதிதேடி தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்! தாயினும் அன்பன் பூமகள் நண்பன் தடநாகப் பாயல் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே. 7 என்று தவத்தை வரையறை செய்து காட்டுவாங் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார். திருமங்கையாழ்வாரும், ஊன்வாட உண்ணாது உயிர்காவல் இட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா : என்றும், காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தியோடு நின்று தவம்செய்ய வேண்டா' என்று கூறுவர். தவக்கோலம் கொண்டு துறவிகள் வாழ்வதைக் கண்டு இல்லறத்தார் தவம் நமக்கு உரியதன்று என்று அதனைக் 147. திருவரங், கலம், 18 148, பெரி. திரு. 3.2:1 149. டிெ. 8.2:2