பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 五 65 கைவிடுகின்றனர். இது தவறு. தவம் அனைவர்க்கும் பொதுவானது; சிலர் குடும்ப வாழ்க்கையிலிருந்தே செய்யமுடியும்; சிலர் குடும்ப வாழ்கையைத் துறந்தும் செய்ய முடியும். உண்மை இவ்வாறு இருக்க, இல்லறத்தார் தவத்தை மறப்பதற்குக் காரணம் யாதோ? துறந்தார்க்கு உணவு முதலியவற்றை உதவுவதே தம் கடமை என்று தவத்தை அவர்கட்கு உரியதாக்கி விட்டு மறந்தார் களோ? துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்? (26.3) என்பது வள்ளுவம். விரும்பியவற்றை விரும்பியவாறு பெறக்கூடிய தன்மை இருப்பதால் செய்வதற்கு உரிய தவத்தை இல்வாழ்க்கையிலும் முயல வேண்டும் என்பது வள்ளுவர் பெருமானின்கருத்து (265). இவ்வாறு தவம் செய்பவர்களே தம் கடமைகளைச் செய்தவர்களாவர்; மற்றவர்கள் ஆசையாகிய வலையில் அகப்பட்டு வீணான தீமை செய்கின்றவர்கள். புலன் ஒடுக்கம் உயிர்ப்பு ஒடுக்கமாய்த் தவப் பழக்கத்தை மேற்கொண்டு வந்தால் உட்கருவிகள் சிறந்த ஆற்றலைப் பெறுகின்றன. அதனால் :உயிராற்றல் நாளுக்குநாள் பெருக்கெடுக்கின்றது. அவர்கள் ஆற்றல் மனிதர்களாய்த் திகழ்கின்றனர். மனிதராய்ப் பிறந்தவர்க்கு உட்கருவியின் ஆற்றலும் உயிராற்றலும் பெறவேண்டியதே கடமை. மாந்தர்க்கு முயற்சி என்பதும் இதுவே. முயல்வோர் என்றால் தவம் முயல்வோரே. இல்வாழ்வார் அருளோடும் அன்போடும் பிற உயிர் களையும் காக்கும் நோக்கத்தோடு அதற்குரிய ஆற்றலைத் தவத்தால் பெறும் மாட்சியர். தவப் பயிற்சியில் துன்பம் மேன்மேலும் வரும்; அதைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பொன் ஒளிவிட வேண்டுமானால் அதனைத் தீயிலிட்டுக் காய்ச்சுகின்றோம். இதனால் பொன்னின் மாசு நீங்கி ஒளிவிடும் பொன்னா கின்றது. சுடச்சுடரும் பொன்போல் சுடச்சுட நோக்கிற்