பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 5 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறை ைம. பவருக்கு மாசுநீங்கி தேசு பொலிவுறும் (267). இவ்வாறு தவம் செய்து ஆற்றல் பெற்றவர்கட்குக் கூற்றுவனையும் கடந்து போகமுடியும் (269). இத்தகைய ஆற்றலற்றவர் களே உலகில் பலராகக் காணப்படுகின்றனர். தவம் செய் தார் சிலராகவும். செய்யாதவர் பலராகவும் இருப்பதே. இத்தகைய நிலைக்குக் காரணம் ஆகும். இலர்பலர் ஆகிய காரணம் நோற்பவர் சிலர்;பவர் நோலா தவர் (270) என்பது வள்ளுவம். 4. கூடாவொழுக்கம்: திருவள்ளுவர் எல்லா அதிகாரங் களிலும் மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளைக் கூறியபோதிலும் ஒழுக்கமுடைமை’ என்ற தனி அதிகாரத்தை வகுத்து இல்லற இயலில்’ அடக்கிக்காட்டினார். உடன்பாட்டிலேயே கூறுவதில் வழக்கமாகக் கொண்ட வள்ளுவர்பெருமான் சில சமயம் தாம் கூறுவதை வலியுறுத்தும்பொருட்டு எதிர்மறையிலும் கூறுவதுண்டு. அங்ங்னம் கூறுவதில் இல்லறவியலில் கூறிய பிறனில் விழையாமையும்', துறவறவியலில் கூறிய கூடா வொழுக்கமும் அந்தந்த நிலையில் இருப்பவர்களுக்கு மிக ழுக்கியமானவை. இல்வாழ்வார் மேற்கொள்ளும் உள்ளத் துறவறம் மேலுக்கு ஆடம்பரமாய்ப் புறத்தே நிகழ்வதன்று. அவரவர் உள்ளம் நிறைவு கொள்ளும்படி அகத்தே நிகழ்வது. கரவு மனம் இதற்கு நேர்மாறானது. தவ ஒழுக்கம் உடையவர்கட்கு முற்றிலும் பொருந்துவது தவக்கோலம். தீய ஒழுக்கம் உடையவர்கள் தவக் கோலத்தைக் கொண்டு வாழ்வது குற்றம்: பெருங்குற்றம். மிகுதியாகத் தீங்கு இழைப்பதற்கு அந்தக் கோலத்தைப் பயன்படுத்துவது வஞ்சம் ஆகும். வஞ்ச மனத்தானின் பொய்யொழுக்கம் புறத்தார்க்கு உடனே புலனாகா விடினும், அவன் உடம்பில் கலந்துள்ள ஐந்து பூதங்களுக்கு,