பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 68 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வவி.இல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (273). என்பது வள்ளுவம். ஆகையால் தவக் கோலத்தில் மறைந்து வாழ்ந்து குற்றங்களைச் செய்வது பொல்லாதது. அது, வேடன் ஒருவன் புதரில் மன்றந்து நின்று கண்ணி வீசிப் புட்களைப் பிடிப்பதை யொத்தது (274). கரவு உள்ளத்துடன் தோன்றும் துறவியர்களை நம் பும் நல்லவர்களை வஞ்சித்து வாழ்வோரைப்போல கொடி யவர்கள் உலகத்தில் இல்லை. அவர்கள் குன்றி மணி போன்றவர்கள். வெளித்தோற்றத்தில் குன்றிமணியின் செந்நிறம்போல் தோன்றும் அவர்கள் நெஞ்சம் அதன் கருநிதம் போல் இருண்டிருக்கும் (277). மனத்தில் மாசு நீங்காத நிலையில் தவத்தால் மாட்சி பெற்றவர்கள்போல் நீராடித் துாய்மை காட்டித் தம் குற்றங்களை மறைத்து வாழும் பல ஆஷாடபூதிகள் நிறைந்தது இவ்வுலகம் (278). ஆகையால் உண்மையாளர்களைக் கண்டறிய வேண்டுமானால் வெறுந்தோற்றத்தால் அவர்களை அறு தியிடல் முடியாது. அம்பு நேரானதுதான்: ஆனால் கொடுமை செய்வது. யாழின் கோடு வளைந்த வடிவம் உடையதானாலும் இனிய பயன் தருவது; செவிக்கினிய இசையை நல்குவது. இதனை மனத்தில் கொண்டு மக் களை ஆய்ந்தறிதல் வேண்டும். தோற்றத்தால் மயங்கி விடாமல் அவரவர் செய்யும் செயல்களின் நன்மை தீமை யால் கண்டறிதல் வேண்டும் (279). தவத்திற்கென்று தனிக்கோலம் நாட வேண்டிய தில்லை. தலைமயிரை மழித்து மொட்டையாக்கிக் கொள்ளவும் (திருவாவடு துறை வழி), நீட்டி சடையாக்கிக் கொள்ளலும் (தருமபுர வழி) வேண்டா. உலகம் பழிக்கும் குற்றத்தைச் செய்யாமல் விட்டு வாழ்தல் அதுவே போதும். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280)