பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 夏苔剑 என்பது வள்ளுவம். இந்தக் குறளில் நீட்டல்’ என்பது பற்றி ஒரு குறிப்பு : நீட்டல் என்பது வளர்த்தலேயன்றி சடையாக்கிக்கொள்ளுதலும் அடங்கும். மடத்துடன் நன்கு தொடர்பு கொண்டவர்கட்கு இது நன்கு தெளிவாகும். ஒரு சமயம் எனக்குத் தெரிந்த மடம் ஒன்றில் இருவர் சந்நியாசம் பெற்றனர். அதில் ஒருவர் வழக்கறிஞர்: மற்றொருவர் படைத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இருவரையும் கிராப்புத் தலையுடன் கண்ட துண்டு. ஒரு வாரத்தில் இருவரும் தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கோண்டதைக் கண்டு வியந்து போனேன். முதல் நாள் பட்டம் கட்டிக்கொண்டு பாராளவேண்டிய இராமனுக்கு ஒரிரவில் நீண்ட சடைமுடி எப்படி வந்தது? இஃது எனக்கு விளங்காப் புதிராகவே இருந்தது. நாடகத்தில் சந்நியாசிக் கோலம் கொள்வது எளிது. ஏனெனில், தயாராக இருக்கும் சடைமுடியை அப்படியே எடுத்துக் கவிழ்த்துக்கொள்ள வேண்டியதுதான்! அயதார்த்த உலகில்-உண்மையில் சந்நியாசம் கொள்வோ ருக்குத் தலையில் எப்படி நீளமான சடை ஏற்படும்? அதுவும் கிராப்புத்தலையுடன் இருப்போருக்கு இடுப்புக்குக் கீழ் தொங்கும் சடை எப்படி ஏற்பட்டது? இதனைப் படைத் துறையில் பணியாற்றித் துறவுக் கோலம் கொண்ட அன்பர் தம் அறைக்கு என்னை இட்டுச் சென்று செய்முறையை விளக்கினார். தலையின் இழிந்த மயிர்த்துண்டுக் குவியலைக் காட்டினார். ஆலம் பிசின் போன்ற செயற்கை முறையில் தயார் செய்யப்பெற்ற கூழ் போன்ற பசையையும் (Fevicol போன்றது) காட்டினார். துண்டு மயிரையும் பசையையும் பயன்படுத்தி முருங்கைக்காய் போன்ற சடையை ஒட்டும் முறையையும் விளக்கினபோதுதான் * நீட்டல்’ என்ற சொல்லின் பொருள் தெளிவாகியது. அயோத்தி அண்ணல் இப்படித்தான் தாழிருஞ் சடைகள்” தாங்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று. ஒராண் டிற்குள் துறவுக்கோலம் கொண்ட இந்த இரு நண்பர்களை யும் காணமுடியவில்லை. துறவுக் கோலத்தின் தொல்லை.