பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 70 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறை ை. யைப் பொறுக்கமுடியாமல் அவர்கள் தத்தம் பூர்வாசிரமத் திற்கே திரும்பி விட்டதாகக் கேள்விப்பட்டேன். 5. கள்ளாமை : பிறர் பொருளை மறையக் கவரும் நிலை நெஞ்சின் நினைவிலேயே அழிக்கப்பெறுதல் வேண்டும். கருதுதலும் செய்தலோடு ஒக்குமாதலால் அதனையும் தவிர்த்தல் வேண்டும். உள்ளத்தில் எண்ணுவது முதல்படி செயல் அதன் இரண்டாம் படி. ஆதலால் இவ்வாறு கூறினார். கள்ளாமை காக்கத் தன் நெஞ்சு’ (281), உள்ளத்தால் உள்ளலும் தீதே (282) களவின் கண் கன்றிய காதல்’ (284) களவென்னும் கார் அறிவு' (287), களவறிந்தார் நெஞ்சில் கரவு’ (288) என்னும் குறள்களின் தொடர்களால் நெஞ்சின் கரவு நினைவே. வன்மையாகக் கண்டிக்கப்படுவதைக் காணலாம். திய முறையில் செல்வம் சேருதல், ஆவது போலத் தோற்றுமே தவிர நிலைக்காது. தீயன, ஆவதே போன்று கெடும் இந்தச் செல்வம் போகுங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன் கொண்டு. போய் விடும்.' புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை யும் கொண்டு போவதுபோல, தீய முறையில் ஈட்டும். செல்வம் வந்த அளவினும் மிகுந்து போய்விடும். ஆகவே, இல்வாழ்வார் தம் உழைப்பினால் கூடி வரும் பொருளில் வாழ்க்கை நடத்தப் பார்க்க வேண்டும். அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.(4:79) என்று வள்ளுவர் பிறிதோர் இடத்தில் கூறியதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அவரவர் அளவில் நின்று வாழ்க்கை நடத்துதல்பற்றி வள்ளுவர் பெருமான் அருமை யான குறிப்பொன்றை இல்வாழ்வானுக்கு வழங்குகின்றார். அளவில் நின்று வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொண்டு 150 பழமொழி-213