பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 星擎芷 வாழ முடியாதவர்கள் களவில் முதிர்ந்த வேட்கையுடை யவர்கள் ஆவர். (286). அளவு அறிந்து வாழும் ஆற் றலை விரும்பி மேற்கொண்டவரிடத்தில் களவு என்னும் குற்றம் காணப்படாது. அளவறிந்து வாழாத பெரிய அரசு ஊழியர்கள் கூட அளவற்ற கையூட்டுக்கு அடிமை தயாகி மறைகாவலர்களால் பிடிபட்டு மானத்தையும் மதி யையும் இழந்து தண்டனைக்குள்ளாவது இன்றைய சமூக வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகளாவதைக் காண்கி றோம். இதனை ஒளவைப் பாட்டி, ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டு, போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தியனாய் நல்லார்க்கும் பொல்லனாம; நாடு' என்றவாறு பண்டே பகர்ந்துள்ளமையை நாம் நினைந்து பார்க்கின்றோம். அளவறிந்து வாழ்கின்றவர்களின் நெஞ்சில் அறம் விளங்குவதுபோல களவு உடையவர்களின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும் (288). களவு தவிர மற்ற நல்வழி களை நம்பித் தெளியாதவர்கள் அளவு அல்லாதவற்றைச் செய்து அவ்வாறே அழிந்தும் போவார்கள். அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் (289) என்பது வள்ளுவம். இந்த அதிகாரத்தில் பாதிக் குறள்கள் அவரவரும் அவரவர் அளவில் நின்று வாழ்க்கை நடத்த வேண்டுமென்றே வழி காட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன. 6. வாய்மை : பொய்ம்மை என்னும் எதிர்மறையால் கூறாமல் வாய்மை’ என்னும் உடன்பாட்டால் வள்ளுவர் பெருமான் கூறுவது உள்ளத்துறவு மேற்கொள்ளும் நோன் புக்கு எவ்வளவு முத்கியம் என்பதை எடுத்துக் 151. நல்வழி-25