பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை காட்டும். உள்ளத்துறவு என்பது அவரவர் நெஞ்சமே அறியக் கூடிய அகநெகிழ்ச்சி; வாய்மை என்னும் பெயர் உண்மையின் தேவைக்காக எழுந்தது. எள்ளத்தில் உள்ள உண்மையை வாயால் கூறுவதே வாய்மை. உள்ளத்தில் உள்ளதற்கும் வாயால் கூறுவதற்கும் பொருந்தியவாறே செயலிலும் ஒழுகவேண்டும்; அதுவே மெய்ம்மை எனப்படும். உள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை, செயலில் (மெய் யளவில்-மெய்யால் செய்யும் செயலளவில்) மெய்ம்மை என வாழும் வாழ்வே அருள் வாழ்க்கை ஆகும். இதனால் வாய்மை சிறந்த அறமாகின்றது. உண்மை பொருந்தி ஒழுகுவது வாழ்க்கைக்கே ஒரு வாய்ப்பு: பொருத்தம். அப்படிப் பொருந்தும் ஒழுக்கமே, நிலையே, சொல்லே வாய்மை எனப்பட்டது என்பது அறியப்படும். வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன் மெய்கூறுவல்' என்று நாஞ்சில் வள்ளுவன் வாய்மையாகிய விழுமிய அறத்தைப் பாராட்டுவதையும் காணலாம். இத்தகைய பேரறத்தின் பெருமையை உணர்ந்த வள்ளுவர் பெரு மான், யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தோன்றும் வாய்மையின் நல்ல பிற (300) என்று சிறப்பித்துப் பேசுவர். பிறருக்கு யாதொரு தீமையும் செய்யாத சொற்களைக் கூறுவதே வாய்மை எனப்படுவதாகும் (291 ). இதனால் நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு சொல்லுதல் மட்டுமே வாய்மை ஆகாது; பொருந்துவதைப் பொருந்தும் முறையில் சொல் லுவதே வாய்மை என்பது தெளியப்படும். இதனால்தான் வள்ளுவர் பெருமான் யாதொன்றும் தீமை இலாத 152. புறம்-139