பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 芷7彦 சொலல்’ (291) என்றும், புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின் பொய்ம்மையும் வாய்மை இடத்த’ (292) என்றும் வாய்மைக்கு இலக்கணம் கூறியுள்ளார். கரவு கலந்தால், அதாவது பொய் வஞ்சனைகள் புகுந்தால், ஆற்றல் அழிந்துவிடுகின்றது. உடன் பயனை எதிர்பார்த்துப் பொய்யர் நிலையான பெரும் பயனை இழந்து விடுகின்றனர். ஆண்டவனும் உண்மைக்கு இரங்கு வானேயன்றிப் பொய்மைக்கு இடம் கொடான். பொக்கம் மிக்கவர் பூவும்நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே??? என்பதுவும், கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை' என்பதுவுமான அப்பர் பெருமானின் அருள்வாக்குகள் இன்றைய பொய்நின்ற ஞாலத்தைப் புனிதப்படுத்தட்டும். நெஞ்சறியத் தீங்கின்றி வாழ்வார் உலகத்தார் எல் லாராலும் மதிக்கப்படுவர். அறிகரி பொய்த்தல் ஆன் றோர்க் கில்லை' என்ற ஆரியவரசன் யாழ்ப் பிரம தத்தனின் வாக்கும் ញ្ញាទិព្វិ நினைவுகூர்தற்பாலது. நெஞ்சம் நினைப்பது மறைவாக நிகழ்வதாய் இருந்தாலும். பிறர் நெஞ்சோடு நமது நெஞ்சு உண்மையில் தொடர்பு டையதாகவே உள்ளது. இஃது ஒர் உளவியல் உண்மை. ஒருவர் நினைவு உலகில் எல்லார் நினைவோடும் யாரை யும் அறியாமலேயே தொடர்பு கொண்டுள்ளது என்பர். 153. அப்பர் தேவாரம் 5.90.9 154. டிெ டிெ 4.7:1 155. குறுந் 184.