பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈74 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முற்ைமை உளவியலார். நினைவோட்டம் காற்றோட்டம் போன்று புறக்கண்களுக்குத் தெரியாமல் இயங்கும். பொய் என்று தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் பிறர் அறியார் என்று எண்ணியும் சொல்லல் ஆகாது; பொய் புகன்ற பிறகு பிறர் அறியாமல் தப்பினும் தன் நெஞ்சே தன் னைச் சுடும். (293) ஆகையால் பிறர்க்கு அஞ்சி வாய்மை யைக் கடைப்பிடிப்பதை விட, தன் மனச்சான்றுக்கு இயைந்து வாய்மையைப் போற்றுவதே நம் கடமை. ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் வாழ் வானானால், அவன் உலகத்தாரின் உள்ளத்தில் எல்லாம் வாய்மையாளனாய்த் திகழ்வான் (294). மனத்தோடு பொருந்த வாய்மை செப்புவோன் தவமும் தானமும் ஒருங்கே செய்வோரை விடச் சிறந்தவன் (295). 7. வெகுளாமை: ஆழ்ந்து சிந்தித்தால் தீமைகளெல்லாம் வெகுளியிலிருந்து பிறக்கின்றன என்பது தெரியவரும். உள்ளத்திலுள்ள வெறுப்பும் பகையுமே வெகுளியாய் வெளிப்படும். அது துறந்தார்க்கு இன்றியமையாததான அருளுடைமைக்கு மாறானது. ஆகையால் அதற்கு இடம் இல்லாமல் காத்துக்கொள்ள வேண்டும். சினத்தின் கேட் டைப்பற்றிப் பாரதியார், சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார்; சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்; தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்; சினம்பற்றிச் சொல்லுவதற் களவே இல்லை; சினம்.பிறர்மேல் தாங்கொண்டு கவலை யாகச் செய்ததெனித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.: 156. பா.க : பாரதி அறுபத்தாறு - 8