பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جسير .3 தமிழ் இலக்கியங்களில்-அறம் 巫75 என்று கூறுவார். ஆகவே, வெகுளியை விடத் தீயது.இல்லை என்று சொல்லவேண்டும். வாழ்க்கையில் மனமகிழ்ச்சியும் முகமலர்ச்சியும் வாழ்நாளைப் பெருக்குவதாகப் பெரியோர் பணிப்பர். அகத்திலும் முகத்திலும் தோன்றும் இந்த மகிழ்ச்சியைச் சினம் சிதைத்து விடுகின்றது. சினம் கொள் பவர் சினத்தால் பிறரை அழித்து விடலாம் என்று கருது கின்றனர். சினம் தம்மையும் அழிக்கின்றது என்பதை அவர்கள் அறியாதவர்களாய் உள்ளனர். தன்னைத்தான் காக்கின் சினங்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் (305) என்பது பொய்யாமொழி. சினம் யாரிடமிருந்து தோன்று கிறதோ அவர்களைத்தான் அது முதலில் அழிக்கின்றது. அவர்களை மட்டும் அன்று; அவர்கள் இங்ைகளையும் அழிக்கின்றது. இதனை வள்ளுவர் பெருமான் ஓர் அழகிய உவமையினால் தெளிவாக்குவர். பாறை நிலத்தின்மேல் ஒருவனுக்குச் சினம் பிறந்து அதனைக் கையால் அறைந்தால், அழிவது அவன் கையே யன்றிப் பாறையன்று. சினத்தைப் பொருளென்று கொண்டவன் தானே அதைப்போல் கேடுறுகின்றான். கொண்டவன் கேடு உறுதி; கொள்ளப் பெற்றவன் கேடு அவ்வளவு உறுதி இல்லை என்பதும் இங்கே நினைவு கூர் தற்குரியது. அதிலும், சினம் கொண்டவனைவிட கொள் :ளப்பட்டவன் தக்கவனாய்ப், பாறை போலத் திண்ணிய உள்ளம் உள்ளவனாய், மெய்ம்மையில் உறுதி மிக்கவனாய், நிலைகுலையாதவனாய், அஞ்சாதவனாய், பொய்ம்மை களுக்கு அசைந்து கொடுக்காதவனாய், எதிர்க்கும் துணி வில் சிறந்தவனாய் இருந்துவிட்டால் யார் சினமும் அவனை எதுவும் செய்தல் இயலாது. இந்த அழகை, பாலை நிலத்து அறைந்தவனது கை பிழையாதது ஒக்கும் என்பதில் மேலும் காண்கிறோம்.