பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰罗经 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கிணத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (307) என்ற வள்ளுவத்தில் இந்த உவமை ஒளி விட்டுத் திகழ் வதைக் காணலாம். “இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று (208) என்னும் குறள் எதிரியின் சினத்தைப் பொறுத்து அதனை வெல்லும் திறத்தை அறிவுறுத்துவதைக் காணலாம். வெகுளி கொண்டவனுக்கு அறிவுரை கூறுவது போல, வெகுளப்பட்டவனுக்கும் கூறும் அறவுரை இதுவாதலை ஈண்டுக் காணலாம். எதிர்க்கும் முறையையும் இது அறிவுறுத்துகின்றது. பிறர் சினம் கொள்ளும்போது தானும் சினம் கொள்ளல் ஆகாது; அது மேன்மேலும் சினத்தை எழுப்பும். சினத்தை எதிர்க்க வேண்டுமானால், எதிர்ப்பில் வெற்றி வேண்டுமானால், பலசுடர் சேர்ந்து எரியும் நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும், அப்போதும், கூடுமானால், சினம் கொள்ளாமையே நன்று. கோபித்துக் காரியத்தை முடித்துக் கொள்ளலாம். என்று சிலர் எண்ணலாம். உள்ளம் கவர்ந்து சினம் ஒங்: கியவுடனே உள்ளுதலின் ஆற்றல் கெட்டு உள்ளியதையும் நடவாதபடி செய்து விடுகின்றதை, நம் அநுபவத்தில் காணலாம். மன இயற்கை இவ்வாறு இருப்பதனால் உள். ளத்தில் சினத்திற்கு இடம் கொடுக்காமலிருந்தால் எண்ணியவற்றை இனிது எய்தலாம்: விரைவாகவும்: அடையலாம்; முழுமையும் பெறலாம். உள்ளிய தெல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் (809) என்ற வள்ளுவம் இக்கருத்தினை எடுத்துக் காட்டுகின் றது. இக்குறளில் வெகுளியை உள்ளத்தான் உள்ளான்”