பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 177 என வந்ததனால், போலியர்க மனத்தில் சினம் கொண்டு அதனை மறைந்து விடுதலும் ஒரளவு காரியங்கள் நிற்ை வேறுதலுக்கு நல்லது என்பதும் தெளிவாகும். சினத்தில் அளவு கடந்து சென்றவர் செத்தவர்க்கு நிகராவர்; சினத் தைத் துறந்தவர் துறவிகட்கு நிகராவர் என்பது பொய் யாமொழி (310). 8. இன்னாசெய்யாமை: இல்லறத்தில் ஒழுகுவார் போற்ற வேண்டிய இக்கருத்தைத் தாயுமான அடிகள், எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே' என்ற பகிர்கின்றார். இக்கருத்தைச் செயற்படுத்து வதில் எவ்வித இடையூறும் தமக்கு நேரிடாதிருக்கவேண்டும் என்று, எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!: ' என்று பாடலின்மூலம் தெய்வ அருட்கருணையைச் சித்திக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றார். பிறருக்கும் பிற உயிர்கட்கும் இனிய அல்லாதன செய் தல் அழுக்கு நிலை; செய்யாத நிலை அழுக்கற்ற நிலை. சிறப்பைத் தருகின்ற செல்வம் பெறுவதாக இருந்தாலும் பிறர்க்கு இன்னா செய்யாமல் வாழ்வதே மாசற்றவர் களின் கொள்கையாகும் (311). பிறர் செற்றம் கொண்டு தமக்குத் தீமை செய்தபோதிலும் அவர்களுக்கு அதற்கு ஈடாகவும் இன்னர் செய்யாதிருப்பது மாசற்றவர்களின் 157. பர்ாபரக் - 221 158. டிெ - 65 த.இ.அ-12