பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கொள்கையாகும் (312). தாம் ஒன்றும் செய்யாதிருக்க, தமக்கு வேண்டுமென்றே துன்பம் செய்தவர்களை அடக்கு வதற்காகத் திருப்பி இன்னா செய்யலாம் என்ற எண்ணம் மனத்தில் எழுதல் கூடும். ஆனால் அவ்வாறு இன்னா செய்தபின், அதுவும் செய்தவர்களுக்கு நீங்காத துன் பத்தை விளைவிக்கும். ஆகையால் அதுவும் கூடாது என்கிறார் வள்ளுவர் பெருமான் (313). துன்பம் செய்த வர்களை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். அறிவுடையவர்கள் அவர்களைத் திருத்துவதற்காகக்கூடக் கண்டிப்பதில்லை. மக்கள் ஒருவரையொருவர் தண்டிப்பு தற்கு உரிமையற்றவர்கள். துன்பம் செய்தவர்கள் தமது செய்கையை உணரக் கூடியவர்களாகவும், உணர்ந்து வருந் தக் கூடியவர்களாகவும் நாணயமுடையவர்களாகவும் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் மனம் திருந்துவதற்கு வேறு ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமேயன்றி, ஒறுப்பது கூடாது. அந்த ஒன்று அவர்கள் நானும்படி யாக அவர்கட்கு இனிய தன்மை செய்வதுதான். மேலும் அவர்கள் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையை யும் மறந்து விடல் வேண்டும் என்பது வள்ளுவர் பெரு மானின் அறவுரை: அறிவுரை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்தான தன்னயம் செய்து விடல் (31.4) என்பது அவர்தம் திருவாக்கு. காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாதலின் நாணிய வருமே!’ என்ற ஒரம்போகியாரின் வாக்கும் இதையொட்டியதே. தலைவிக்குத் தலைவன் செய்த கொடுமை அவனது பரத் தமை. தலைவன் இவ்வாறு கொடுமை செய்த காலத்தும் அதனைப் பொருட்படுத்தாமல் எதிரேற்றுக் கொள்ளும் 159: குறுந். 10.