பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 179 தலைவியின் செயல் தலைவனுக்கு நாணத்தை உன் டாக்கும். பிறரைத் தண்டிப்பதில் சிலர் இன்பம் கொள்ளுவதும் உண்டு; பிறர் துயரத்தில் கொள்ளும் அதுவும் ஓர் இன்ப மாகுமா? அந்த வெற்றின்பமும் நிலைக்காது."ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்', (156). இந்தச் சிறிது நேரச் சிற்றின் பத்திற்காக எந்நாளும் பேரின்பம் பயந்து கொண்டிருக்கும் தமது பெருந்தன்மையை இழந்துவிட அறிஞர் ஒருப்படார். தனக்கு வலிமைகூடி வந்த காலத்தும், திரும்பத் திரும்ப ஒருவன் பகைமை பாராட்டி வந்தபோதும், சிறிதளவு مسمة محرك மனத்தாலும் இன்னாதன செய்யாதவர்களே தலை சிறந் தவர்கள் ஆவர்! எனைத்தாலும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மானாசெய் யாமை தலை (317) என்பது வள்ளுவம். மனத்தாலும் தீமை விளைக்காம விருப்பதே அறங்களில் தலையாயது. இதுவே துறந்தவர் கள் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாத நோன் தாகும். இன்னா செய்யாமல் இருப்பதற்கு வழி ஒன்று காட்டு வார் வள்ளுவர். மற்ற உயிர்களின் துன்பத்தைத் தம் துன்பம்போல் உணர்வதே அது. இந்த உணர்வு இல்லா விடில் அறிவால் ஆகும் பயன் ஒன்றும் இல்லை (316). ஆகையால் தான் துன்பம் என்று உணர்ந்தவற்றை மற்ற வனுக்குச் செய்யாமல் விடவேண்டும் (316). பிறர் இன்னா செய்யும்போது தன் உயிர்க்குந் துன்பம் விளைவதை அறிந்தவன் மற்ற உயிர்க்கு இன்னா செய்வது ஏனோ? {2.18). முற்பகவில் பிறர்க்கு இன்னா செய்தால் பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வரும். இஃது அறத்தின் ஆணை. (இதனைச் சித்தாந்த முறையிலும் விளக்கலாம்