பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை விரிவஞ்சி அங்குப் போகவில்லை). துன்பம் எல்லாம் செய் தவர்களையே சாருமாதலால், துன்பம் இல்லாமல் வாழ் விரும்புவோர் ஒருவர்க்கும் துன்பம் செய்யார். மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யும்போது அந்த உயிர் துன்பப்படுவதாகத் தோன்றும். செய்த துன்பம் அந்த உயிரின் உடலளவில் சிறிது நேரம் தாக்கி நீங்கும். ஆனால் உண்மையாகத் துன்பம் உறுவது செய்தவர்களின் மனமே. செய்தவர்களின் உடலில் துன்பம் தாக்கா விட்டாலும், அவர்களுடைய மனம் அந்தத் துன்பத்தைப் பட்டு வருந் தும். மனச் சான்று பண்பட பண்பட, இந்த உண்ம்ை தெளிவாக விளங்கும். இதனை வள்ளுவர்பெருமான், நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய் செய்யார் நோய்இன்மை வேண்டு பவர் (320) என்று கூறுவர். துன்பம் எல்லாம் செய்யப்பட்டவர் களுக்கு அல்ல; செய்தவர்கட்கே உரிமையாய்ச் சேரும்: நோயெல்லாம் நோய்செய்தார். மேலவாம் - என்று அறத் தின் ஆணையாக விளக்குவர் அப்பெருமான். 9. கொல்லாமை: கொல்லாமையைப் பற்றித் தாயு மான அடிகளின் வாக்குகளாகக் காணப்பெறும். கொல்லா விரதம் குவலயமெல் லாம்.ஒங்க - எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமேக்ே கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற்(று) அல்லாதார் யாரோ? அறியேன், பராபரமே.ே என்ற இரண்டு பராபரக் கண்ணிகளில் கொல்லாமை என்ற நோன்பு தெளிவாக உணர்த்தப்பெறுகின்றது. 16 ,ே தா. பா:பராபரக், 54 161 . டிெ. டிெ 192.