பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில், அறம் 181 திருக்குறள் துறவறத்து நோன்புப் பகுதியில் இஃது இறுதி அதிகாரம்: முதல் நோன்பு புலால் மறுத்தல்: இந்த இரண்டின் இடையில் தவம், கூடா ஒழுக்கம், கள் ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை என ஆறு நோன்புகள் சொல்லப்பெற்றதை நினைவு கூர்கின்றோம். திருவள்ளுவர் கூறும் நோன்புகள் செல வில்லாதவை; ஆனால் பெரும் பயன் விளைவிப்பவை: இயல்பாக உயிராற்றல், அருளாற்றல் பெருகுவதற்கு ஏற்றவை: அடிப்படைக் குண நலன்கள் இங்கு மனப்பதைக் கண்டு மகிழலாம். இந்த எட்டு நோன்புகள் மிகவும் தூயன வாய் அமைந்து இல்வாழ்வானின் உள்ளத் துறவு மேம் பட்டுச் சிறந்தோங்கி நிலைபெறத் துணை புரிகின்றன. வள்ளுவர் பெருமான் முதலில் புலையும் இறுதியில் கொலையும் நிறுத்தி ஏனைய ஆறு நோன்புகளையும் அவற்றின் இடையில் இணக்கி வைத்திருப்பதை நோக்கி னால், புலையும் கொலையும் தவிர்’, ‘நோன்பு என்பது கொன்று தின்னாமை' என்ற பொன்மொழிகளின் சிறப்புப் புலனாகும். திருவள்ளுவர் பெருமானே இந்த அதிகாரத்தில் கொலை வினையராகிய மாக்கள் புலை வினைஞர் (329) என்று இரண்டு குணங்களையும் இணைத்துக் காட்டுவர். அருட்பெருஞ் செல்வர் வடலூர் ←Ꭵ ©fᎢ ©iᎢ ©fFfr , உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்.அவர் புறஇனத்தார்" என்று உலக மக்களை இரண்டே சாதியராகப் பிரித் ‘புலை கொலையுடையவர்கள் புறவினத்தார், புலால் 162. கொன்றை வேந்தன் - 58 163. திருவருட்டா - ஆறா, திருமுறை - அருள் விளக்க மாலை - 71: