பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 2 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை மறுத்தலும் கொல்லாமையுமாகிய நோன்புகளையுடைய வரே அகவினத்தார்’ என்று தெரிவிப்பார். இதனால் இரு பேரறங்களும் ஒன்றுக்கொன்று இனமாய் இணை தலைத் தெளிவாக அறியலாம். உலகில் அன்றாட வாழ்வில் நிகழும் கொலைகள். எண்ணற்றவை; காய், கனி, கிழங்கு, கூலம் முதலியவற். றைப் போதிய அளவு பெற முடியாத குறைவாலோ, போதிய அளவு விளைவிக்க முடியாத காரணத்தாலோ பிற உயிர்களை உணவுக்காகக் கொல்லும் கொலையும் நிகழ்கின்றது. இவற்றுள் வறுமையால் நிகழும் வேறு. கொலைகளும் உள்ளன. கற்புக் கொலை, அறிவுக்கொலை, மானக்கொலை, ஒழுக்கக்கொலை, அன்புக்கொலை, இங்ங்னம், அம்மம்ம எண்ணற்ற கொலை வகைகள் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளன. இவற்றை யெல்லாம் கருத்தில்கொண்டு வள்ளுவர் பெருமான் இவை: யாவும் படைப்பின் அரிய நோக்கத்தைப் புறக்கணிப்பதால் விளைவனவாகும் என்று உணர்கின்றார். இங்ங்ணம் உணர்ந்தவர் பல உயிர்களையும் காக்கவேண்டிய. அறத்தை வலியுறுத்துகின்றார். அறநூல்கள் தொகுத்துக் கூறிய அறங்கள் பலவற்றிலும் தலையாய அறம், உள்ள வற்றைப் பகுத்து உண்டுபல்லுயிர்களையும் காக்கும் அறமே என்று தெளிவுபடுத்துகின்றார் (332). நியாயவிலைக் கடைகள் இதற்காக ஏற்படுத்தப்பெற்றவை. ஆயின், அங்கும் மனிதனுடன் பிறந்த சாத்தான் தன் கைவரிசையை: காட்டுகின்றான். ஓர் உயிரையும் கொல்லாமல் இருப் பதுவே அறமான செய்கையாகும். கொல்லுவது பாவச் செயல் அனைத்தையும் தருவதாகும் (321) இல்வாழ்க்கைக்குரியனவாய் எடுத்துக் காட்டப் பெற்ற ஒப்புரவும் ஈகையும் துறவற்த்து நோன்புகளில் முடிபோன்ற கொல்லாமை அதிகாரத்தில் முக்கியக் குறிப்