பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் I 83 களாய் வந்தமையால் இல்வாழ்க்கைக்கே துறவறச் சிறப் பும் உரியதென்பது தெற்றெனத் தெளிவாகும். நல்லாறு எனப்படுவது கொல்லாமை; பிற உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஆயுளை இடையிலே குறைப்பவர்கட்கு, இடைக்காலத்திலேயே ஆயுள் குன்றி இறப்பு நேரிடுகின்றது (324). மக்கள் வறுமையில் நெளிவதற்குமுன் கொலை செய்த தீவினை காரணமாய் விடுகின்றது. சில சமயம் எதிர்பாராமல் பல்வேறு கொலைகள் நடை பெறுகின்றன. தம்மைக் கொல்ல வருவது பசுவே யானாலும், அதனைக் கொன்று தீர்ப்பதே கடமை’ என்பதே சிலரது கொள்கையாக உள்ளது! எத்தனையோ பேர் சொத்துக்காகவும் அரசு பதவிக்காகவும் உடனிருப் பவர்களையே கொன்று தீர்க்கின்றனர். பண்டங்கள் பறிப்புக்காக எத்தனைக் குழந்தைகள், எத்தனைப் பெண்டிர், எத்தனை வழிப்போக்கர் நாட்டில் கொலை யுண்டு போகின்றனர். தேர்தல் காலத்தில் உயிரிழப் பவர்கள் எத்தனை பேர்! வாழ்க்கை சில சமயங்களில் போராட்டமானதாக வடிவெடுக்கும்; மற்றோர் உயிரைப் போக்கினாலன்றி தன் உயிர் வாழ்க்கைக்கு இடம் இல் லாததுபோல் தோன்றும். இந்த நிலையிலும், தன் உயிர் நீங்குவதனாலும் தான் வேறொன்றன் இனிய உயிரை' நீக்கும் கொலையைச் செய்யலாகாது. தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன் உயிர் நீக்கும் வினை (327) என்பது வள்ளுவம். பிறிது இன்னுயிர் நீக்கும் வினை" என்பதில் உயிர் இன்னுயிர் என்று வந்திருப்பதை நோக் கினால் வள்ளுவர் பெருமான் உயிரை இப்படி விதந்து அதன் அருமை புலப்பட வைத்துள்ளமையைக் கண்டு வியப் ப்ெய்துகின்றோம். கொலையால் ஏற்படும் நல்ல பயனாகிய் ஆக்கம் பெரிது என்றாலும், சான்றோர் அந்த ஆக்கத்