பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五怒4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தைப் பொருட்படுத்தார்; தீநெறிகள் மிகவும் கடைப் பட்டதாகவே கருதுவர் (328). (ஆ) ஞானப்பகுதி அடுத்து, துறவறவியலிலுள்ள ஞானப்பகுதியைச் சிந் திப்போம். இப்பகுதியில் நிலையாமை, துறவு, மெய் யுணர்தல், அவாவறுத்தல் என்ற நான்கு அதிகாரங்கள் உள்ளன. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த நான்கும் பாயிரப் பகுதியிலுள்ள நான்கு அதிகாரங்களுடன் பொருள் பொருத்தம் கொண்டு அமைந்திருப்பதைத் தெளிவாக அறியமுடியும்.ஞான இயல்பும் இறைவன் இயல்பும் ஒன்று போன்றவை. கடவுள், மழை (இறையருள் - அம்மை), நீத்தார், அறம் என்ற நான்கும் முறையே ஆண்டவன், அவர் ஆற்றல், அந்த ஆற்றலோடு இணங்கிய துறவோர், அவர்கள் கடைப்பிடிக்கும் அறம் ஆகியவற்றைக் குறிப் 1தைக் காணமுடிகின்றது. ஆண்டவன் நிலைத்தவர்; உலகம் நிலையாதது. ஆத லால் ஞானப்பகுதியில் முதல் அதிகாரம் நிலையாமை யாய் அமைந்தது; இறைவனது அருளாற்றல் மழை உரு வாய் பாயிரத்தில் இரண்டாம் அதிகாரமாக நிறைந்தது; இந்த ஆற்றலோடு நெருங்குதல் என்னும் துறவு ஞானப் பகுதியில் இரண்டாம் அதிகாரமாய் நின்றது! வான் சிறப்பு {மழையின் சிறப்பு) அம்மை எனும் ஆற்றலில் ஒன்றி அப் படித் துறந்தோர் பெருமை அந்த ஆற்றலுக்கு மூலமாகிய இறைவன் என்னும் மெய்யை - செம்பொருளை உணர்தல் ஆதலின் பாயிரத்தில் நீத்தார் பெருமை அமைந்ததுபோல ஞானப்பகுதியில் மெய்யுணர்தல் அமைந்துள்ளது. மெய் உணர்ந்தவரே நீத்தார்; நீத்தாரின் அவா அற்ற கடமை கள் அறம் எனப் பாயிரத்தில் வந்துள்ளது போல, இங்கே ஞானப்பகுதியில் அவா அறுத்தல் இறுதியாக நின்றுப் பொலிவு பெறுகின்றது. - .