பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் - - 135 சாத்திர நூல்களில் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், திட்டை என்பன ஞானத்தின் கூறுகள் என்று தெளியப் பட்ட உண்மைகள். குருமுகமாய்க் கேட்டலால் நிலை யாமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த விளக் கத்திற்குப் பிறகு நிலையாக உதவி வரும் அருளைச் சிந்தித்து அதனுடன் நெருங்கி வரும் துறவை எய்த முடி கின்றது. சிந்தித்ததன் பயனாகக் கூடிவரும் தெளிவால் தெய்வம் மெய்யுணர்வு ஏற்படுகின்றது. நிட்டையினால் அவா என்னும் மலவாதனை நீங்குகின்றது. ஆகவே, இப்பகுதியில் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் என்னும் நான்கு நிலைகளும் உண்டாகின்றன: இவை இப்பகுதியில் இடம் பெறுகின்றன. இவற்றை ஒவ் வொன்றாகச் சிந்திப்போம். 1. நிலையாமை: வழிநடையை மேற்கொள்பவன் வழியின் தன்மைகளை அறிந்து கொண்டு பயணம் செய்யும் போது கலக்கமும் தயக்கமும் கொள்ளாமல் அஞ்சாமல் நடக்க முடியும். வழி நல்வழியாகவும் கல்வழியாகவும் முள்வழியாகவும் இருக்கலாம் என்று முன்னமே அறிந் திருந்தால் அவற்றைக் கடக்கும் கவலை ஏற்படாது. வாழும் வாழ்க்கையும் அப்படிப் பட்டது. உடல், உயிர், செல்வம் இவற்றின் நிலையற்ற தன்மைகளை அறிந்து கொண்டால் பிரிவோ மாறுதலோ இயல்பாக நேரிடும் போது மனம் கலங்கி வருந்திச் சோர்வடைய நேரிடாது. நிலையாமை உணர்வு வாழ்க்கையின் தன்மையை உள்ள வாறு அறிந்து அஞ்சாமல் நின்று கவலையற்று வாழ்க் கையை நடத்திச் செல்ல உதவுகின்றது. மெய்ப்பொருளை உணர்வதற்கும் இவ்வுணர்வு துணை நிற்கும். இங்கு செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை சிந்திக்கப் படுகின்றன. செல்வ நிலையாமையை விளக்கும் போது கூத்தாடும் இடத்தை நினைக்கச் செய்கின்றார் வள்ளுவர் பெருமான்.