பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷急税 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைம்ை கூத்தாடும் இடத்தில் மக்கள் முதலில் சிறுகச் சிறுக வந்து சேர்ந்து இறுதியில் எல்லாரும் தொகுப்பாய் எழுந்து கலைந்து போகின்றனர். அங்ங்னமே செல்வம் சேரும்போது சிறுகச் சிறுகச் சேர்ந்து குலையுங்காலத்தில் ஒன்றாய். அழிந்து விடுகின்றது. கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (332) என்பது வள்ளுவம். இத்தகையச் செல்வத்தை சேரும் போதே பயன் படுத்தல் வேண்டும். நிலையான அறக் செயல்களை அப்பொழுதே செய்தல் வேண்டும் (333). யாக்கை நிலையாமையை மிகச் சுவையாக விளக்கு வார் அப்பெருமான். நாள் என்பது ஒரு கால வரையறை போல் தோன்றுகின்றது. அதனால் ஒவ்வொரு நாளும் கழிவதைக் கண்டு பலரும் மகிழ்கின்றனர். ஆனால் உண்மையில் ஒவ்வொரு நாள் கழியும்போதும் உயிர் வாழும் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைகின்றது. இதை உணர்ந்தால் உண்மை விளங்கும். நாள் என்பது ஒரு கால வரையறைபோல் காட்டினாலும் அஃது உயிர்ை உடம்பிலிருந்து ஈர்ந்து செல்கின்ற வாளாகும் என்பது: விளங்கும். * நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வாகப் பெறின் (334) என்பது வள்ளுவம். உடம்பிலிருந்து உயிர் பிரியும்போது: பேச முடியாதபடி நாக்கை அடக்கி விக்குள் மேலெழுந்து வரும். அந்த நிலைவந்து சொல்லும் செயலும் செய்யத், தக்க நல்வினையெல்லாம் விரைந்து செயல் வேண்டும், (335). உடம்பிலிருந்து உயிர் பிரியும் நிைையை, மேல்எழுந்துஓர் வாயுக் கிளர்ந்து மேல்மிடற்றினை உள்எழ வாங்கிக்