பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 187". காலும்கையும் விதிர்விதிர்த்து ஏறிக் கண் உறக்கம்.அது ஆவதன் முன்னம்’’’ என்றும், மடிவழி வந்துநீர் புலன்சோர வாயில்கட்டிய கஞ்சியும் மீண்டே கடைவழி வாரக் கண்டம் அடைப்பக் கண் உறக்கம்.அது ஆவதன் முன்னம்" என்றும் மிக அருமையாக விளக்குவார் பெரியாழ்வார். இறுதிநாள் என்று வரும் என்று அளவுபடுத்திச் சொல் வதற்கில்லை. நேற்று நன்றாக இருந்த ஒருவன் இன்று இல்லாமல் இறந்தான் என்று சொல்லும் பெரு மை: யுடையது இவ்வுலகம். நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு (336) என்பது வள்ளுவர் பெருமானின் திருவாக்கு. இதனை இளங்கோ அடிகள், இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை" என்று தெளிவாக, நயமாக, நேராக விளக்குவதையும் கண்டு. மகிழலாம். முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகின்றது. பிறகு, அஃது அதனுள் புகுவதில்லை. அந்த உறவுதான் உடம் பிற்கும் உயிர்க்கும் இடையே உண்டு. ஆகையால் இந்த, உயிரும் காலம் வந்தபோது உடம்பைத் தனியே விட்டுப். பிரிந்து போய்விடும். 164. பெரியாழ். திரு. 4.5:4 165. டிெ 4.5:5 166. சிலப். நடுகல் காதை - அடி 181-82