பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.88 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு (337) என்பது வள்ளுவம். மணக்குடவர் குடம்பையைக் கூடு என்று கொள்வர். வ. உ. சிதம்பரனாரும் இவ்வாறே கொள்வர். ஆனால் பரிமேலழகர், அது (கூடு) புள்ளுடன் தோன்றாமையானும், அதன்கண் அது மீண்டும் புகுதல் உடைமையானும், உடம்பிற்கு அது (கூடு) உவமை ஆகாமை அறிக' என்று ம்றுப்பர். இறப்பு உறங்குவது போன்றது; பிறப்பு உறங்கி விழிப்பது போன்றது(339); இதற்கென நிலையான இடம் ஒன்றும் அமையவில்லை (340), ஆகவே விழிப்பு உள்ளபோதே கடமைகளைச் செய்து முடிப்பதுபோல் வாழ்வு உள்ளபோதே அறத் தைப் போற்றி உய்ய வேண்டும். 2. அகத் துறவு செல்வமும் உடம்பும் நிலையாமை கண்டபின், அருளுணர்வு மிகுந்து தன்னலம் அழிந்து விடும்; வாழ்க்கையில் பற்று முழுவதும் அற்றுப் போகும். திருவருள் ஒன்றே நிலையெனத் துணிந்து அதனில் நெருக்கம் கொள்ளுதலே துறவு ஆகும். இந்த நிலையிலும் இல் லறத்திலிருந்து பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து கடமை செய்வோரும் உளர். இவர்களுடைய நிலை அகத்துறவு” ஆகும். சிலர் இந்நிலையில் சட்டி சுட்டதடா கைவிட்ட தடா என்று இல்லறத்தை விட்டுத் தன்வீடு, தன்பொருள் என்பவை இல்லாமல் வாழ்வர். இது புறத் துறவு என்று கூறப்பெறும். ஒருவன் எதனிடம் பற்றுக்கொண்டு வாழ்கின்றானோ அதனால் துன்பம் அவனுக்கு நேரும். எதனினின்று பற்றற்று வாழ்கின்றானோ அதனால் அவனுக்குத் துன்பம் நேரிடுவதில்லை. இந்த அறவுரையுடன் துறவு அதிகாரம் தொடங்குகின்றது. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல். அதனின் அதனின் இலன் (341).