பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 189. என்பது வள்ளுவம். இங்கு 'நீங்கியான் என்பதற்குப் பற்று நீங்கியான் என்பது கருத்து. பொருளையே நீங்கியான்’ என்பது கருத்தாகாது. பிறப்பறுக்கல் உற். றார்க்கு உடம்பும் மிகை (345) என்பதிலும் உடம்பின் மேல் வைக்கும் பற்றே மிகை; அப்படியிருக்கும்போது மற்றப் பொருள்களின்மேல் பற்று எதற்கு என்பது கருத்து. உலகில் பிறந்து விட்டதனால் அப்பிறப்புக் கேற்ற ஒழுக்கத்திற்குத் தேவை சிறிதாவது வேண்டப் படும். ஆயினும் தேவைகளை மிகக் குறைந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ளுதல் நல்லது; அன்றியும், அந்தக் குறைந்த தேவையிலும் பற்றுக் கூடாது என்பது கருத்து. உலகத்தில் பிறந்த மக்கள் உலகத்தின் நிலையாமையைக் கருதினாலும் அந்த உலகத்தில் தானே உலவிக் கொண்டி ருக்க வேண்டும்? உடம்பு நிலையாமை கருதி யான்’ என்னும் அகப் பற்றை நீங்கியிருக்கலாமேயன்றி, உடம்பை நீங்கியிருத்தல் இயலாதல்லவா? அங்ங்னமே வீடு, வாசல், செல்வம் முதலியவற்றின்மேல் எனது' என்னும் புறப் பற்றைத் துறக்க வேண்டுமானால், அந்த வீடு, வாசல் முதலியவற்றைத் துறக்க வேண்டும் என்னும் கருத்து பொருந்துமா? இவற்றை நன்கு அறிந்த மடாதிபதிகள் மடத்தையும் அதன் செல்வத்தையும் துறக்க வேண்டும் என்பது அசம்பாவிதம். பொருள்களை நீக்கி விடுதல் இயற்கையாகாது. அப்படியே மனைவி மக்கள் சுற்றம் நட்பு முதலிய எல்லோர்மீதும் பற்றுக் கூடாது. தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் பந்தம்நீங் காதவர்க்கு" 167. சம்பந்தர் தேவாரம் 2. 79; 9