பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்னும் தேவாரத்திருமொழியில் பந்தம் நீங்குதலே' கருத்தாய்க் கூறப்பெற்றிருத்தலை ஈண்டு நினைவு கூர்தல் வேண்டும். இங்ங்னமே, தந்தைதாய் மக்களே சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற பந்தம்ஆர் வாழ்க்கையை நொந்து நீ" என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்திலும் பந்தம் நீங் கலே கருத்தாய் அமைந்திருத்தலைக் காணலாம். முற்றத் துறந்தவர்களாய் இருக்க வேண்டுமானால் அனைவரையும் (தன்னுடன் இயற்கைக் கூட்டுரிமையுடைய மனைவியை யும்) தனித்தொழிய விட்டு ஒருவன் வெளியேறிவிட வேண்டும் என்பது கருத்தன்று. பற்றற்ற வாழ்க்கை வேண்டுமானால் ஐந்து புலன் களையும் தன் வசப்படுத்தி வெல்ல வேண்டும்; புலன்கள். விரும்பும் எல்லா இன்பங்களையும் ஒருங்கே விடவேண்டும் (343). உடம்பு தான் அன்று அதைத் தான் என்று உணர்வது ஒரு மயக்கம்; இதையே தேகாத்ம வாதம்” என்பர். பொருளுக்கும் தனக்கும் இடையே தோன்றும் தொடர்பும் உண்மையானது அன்று; அந்தப் பொருளைத் தனது என்று உணர்வது மற்றொரு மயக்கம். யான்', *எனது' என்று தவறானவற்றை உணரும் இந்த மயக் கங்களைத் தீர்ப்பவன் வானோர்க்கும் அரியதான உயர்ந்த உலக வாழ்க்கையை அடைவான். யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் (346) என்பது வள்ளுவர் பெருமானின் திருவாக்கு. அகப்பற்று, புறப்பற்று ஆகிய இருவகைப் பற்றுகளையும் பற்றிக் கொண்டு விடாமல் மயங்குவோரைத் துன்பங்களும் 168. பெரி. திரு. 9, 7 : 1