பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1, 91 பற்றிக் கொண்டு விடுவதில்லை (347). ஆகையால் பற்று களை முற்றத் துறந்தவர்களே தலையானவர்கள்; மற்ற வர்கள் அந்தப் பற்றுகளால் மயங்கி துன்ப வலையில் அகப் பட்டவர்களாவர் (348). ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பு. ஒரு திங்கள்கூட நிறைவு பெறாத குழந்தை கைக்கெட் டும் பொருள்களையெல்லாம் பற்றிக் கொள்வதைக் காண லாம். ஆகையால் எல்லாப் பற்றுகளையும் விட்டு வாழ வேண்டுமானால் இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த ஒரு பொருளைப் பற்றினால்தான் முடியும். அத்தகைய பற்று பற்றற்ற இறைவனுடைய பற்றேயாகும்; மற்றுப் பற்றுகளை நீக்குவதற்கு இறைவனுடைய பற்தைப் பற்றிக்கொள்ளவேண்டும். பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (350) என்பது வள்ளுவம். பற்றது பற்றில் பரமனைப்பற்று மின்' என்பது திருமூலரின் திருவாக்கு. மற்றுப்பற்று, எனக்குஇன்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன்' - என்பது தம்பியாரூரரின் திருமொழி. பொருள்களோடு தொடர்பு பற்றோடும் நிகழலாம்; பற்றின்றியும் நிகழலாம். பற்றோடு நிகழும்போது துய்க்கும் நிலை அமையும்; பல பெரும் பயன்கள் தப்பும். 169. திருமந். (298) 170. சுந்தரர் தேவாரம். 7.4.8:1 (திருப்பாண்டிக் கொடுமுடிப் பதிகம்)