பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை துய்ப்போம் எனினே தப்புன் பலவே' என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் நல்வாக்கு. பொருள்கள் எந்தப் பயனுக்காக இருக்கின்ற னவோ அந்தப் பயனை அடைய முடியாது. 3. மெய்யுணர்தல்: வாழ்க்கையில் அறியாமையும் போவியறிவும் உள்ளவரையிலும் இல்லாத துன்பமெல் லாம் இருப்பதாகக் கொண்டு கவலையும் அச்சமும் மிகுந்து வருந்த நேர்கின்றது; உள்ள துன்பத்தைப் போக்கிக் கொள்ளவும் வழியறியாமல் திகைக்கவும் நேர்கின்றது. ஆகையால் நல்வாழ்க்கைக்கு மெய்யுண்ர்வு வேண்டும்: மயக்க உணர்வும் நீங்குதல் வேண்டும். மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று: உணர்வதே மயக்க உணர்வு; இந்த மயக்க உணர்வால். தான் துன்பமான வாழ்க்கை ஏற்படுகின்றது (351) மயக்க உணர்வு நீங்கி மாசற்ற மெய்யறிவு பெற்றவர்க்கு அந்த மெய்யறிவு துன்ப இருளை நீக்கி இன்ப ஒளியைத் தரும். (352). உயிர்களை மருள் என ஒன்றும், இருள் என ஒன்றும் மாசு என ஒன்றும் பற்றிக்கொண்டு நாளும் துன்பம் கொடுத்து வருகின்றன. இந்த மூன்றும் நீங்கி னால் உயிரினிடத்தில் ஞானம் என்னும் தெளிவு பிறந்து பேரின்பம் உண்டாகும். மக்களுக்கு ஏற்படும் சிக்கல்கட் குக் குறைவே இல்லை; மெய்யுணர்ந்தாருக்கு ஒரு சிக்கலும், புற உடம்பு என்றாலும் புலன் உடம்பு என்றாலும் ஒன்றே. புலன்கள் ஐந்து ஐம்புல உணர்வு மட்டும் உள்ள வரை ஐயுணர்வு உடையார்’ என்று கூறி விடலாம். அறிவியல் சிறப்புகள் உள்பட உலகியல் நுகர்வுகள் அத் 171. புறம்-189