பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 19.3 தனையும் இந்த ஐயுணர்வில் அடங்கிவிடும். புலன்கள் ஐந்துக்கும் தலைமை ஏற்று நடத்தும் வகையில் மனம் அவற்றைத் தன்மயமாக்கி அடக்கமாய் இயங்கும்படிச் செய்ய முடியும். அங்ஙனமின்றி அப்புலன் வழியில் மனம் தாழுமானால், மனத்தினால் அடையக் கூடிய மாட்சி களும் கல்விகளும் கலைகளும் பிறவும் மக்களால் அடைய இயலாது. இனி, புலனடக்கத்துடன் மனம் மாட்சிமைப் பட்டாலும் போதாது; மனமும் உயரறிவுடன் ஒன்றி அருளுணர்வு, அதாவது மெய்யுணர்வு, தன்னிடம் தலைப் படும்படி இனங்க வேண்டும். வெறும் புலனடக்கத்தால் மட்டிலும் பயன் இல்லை. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்யுணர்வு இல்லாத வர்க்கு (354) என்ற மெய்யுரையைக் கூறுகின்றார் வள்ளுவர். எப் பொருள் எத்தன்மை யுடையதாகத் தோன்றினாலும் அந்தத் தோற்றத்தை உண்மை என மயங்காமல் அதன் மெய்த்தன்மையைக் காண்பதே மெய்யுணர்வாகும் (355). கற்பனவற்றைக் கசடறக் கற்று இவ்வுலகில் மெய்ப் பொருளைக் கண்டவர்கள் இத்துன்ப வாழ்க்கையில் மீண்டும் புகாத நன்னெறியை அடைவார்கள் ; வீடு பேற்றையும் அடைவார்கள். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (356) என்பது வள்ளுவம். பிறவி எடுத்ததன் நோக்கம் மெய்ப்பொருளை உணர் தல். மீண்டும் பிறவி எடுக்காத நிலையை அடைவதே சிறப்பு. மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாரா மே” ஈண்டு வாரா வழி அருளி' பிறந்த பிறப்பறுக் 172. திருவா, சிவபுரா - அடி - 87 173. டிெ திருவெண்பா - அடி - 1 த. இ. அ-13