பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼姆4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கும் எங்கள் பெருமான்' என்பன இக்கருத்திற்கு அர ணாக அமைகின்றன. எடுத்த பிறவியிலேயே இச்சிறப்பை மக்கள் பெற வேண்டும். பிறவியோ எத்தனையோ இடர்ப்பாடுகள் நிறைந்தது. ஒவ்வொரு பிறவியிலும் பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் உண்டாகும் இன்னல்கள் ஏராளம். ஆனால் எல்லாவற்றினுள்ளும் கலந்து எல்லா மாய் நிற்கின்ற ஒரு பொருளை உள்ளம் ஆராய்ந்து தெளிந்து உறுதியாக உணருமானால் மீண்டும் துன்பப் பிறவி ஏற்படாது என்பது உறுதி. ஒர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357) என்பது வள்ளுவர் வாய்மொழி. துன்பப் பிறவிக்குக் காரணமான அறியாமை நீங்க வேண்டி, வீட்டுநெறிக்குக் காரணமான செம்பொருளைக் கண்டுணர்வதே மெய் யுணர்வாகும். பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு (358) என்பது பொய்யாமொழி. விருப்பு, வெறுப்பு, மயக்கம் இந்த மூன்றுமே எல்லாத் துன்பங்கட்கும் காரணம்; இந்த மூன்றன் பெயரும் கெட வாழ்ந்தால் துன்பம் தொலையும் (360). யாம்மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கம் காரணம்' என்ற சாத்தனார் வாக்கும் வள்ளுவர் வாக்குடன் ஒத் துள்ளமை கண்டு மகிழத்தக்கது. இந்த அதிகாரம் இல் வாழ்வார் உள்ளத்துறவுடன் துண்மைகளிலும் மெய்யிலும் 174. டிெ டிெ-அடி - 48 175. மணிமேகலை. 30 : 252-3