பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 互95 வாழ்வாங்கு வாழும் சிறந்த செம்மையை எவ்வளவோ நுட்ப திட்பங்களுடன் விளக்கிக்கொண்டு திகழ்கின்றது. 4. அவாவறுத்தல்: அவாவறுத்தல் என்பதற்கு "புலன்களின்மேல் செல்லும் அவா எனப் பொருள் கொண்டால் அது துறவற நெறியுடையாரைச் சாரும். பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து மெய்யுணர்வு பெற்றவர் கட்கு அவாஅற்ற நிலைமை இயல்பாகிவிடும். ஒரு பொரு ளையும் விரும்பாமல் வாழும் அந்த நிலைமையே சிறந்த பொருளாகும். அதைப்போன்ற செல்வம் இவ் உலகில் இல்லை; அதற்கு நிகரானது வேறு எங்கும் இல்லை. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை; யாண்டும் அஃதொப்பது இல் (363) என்பது வள்ளுவம். தூய நிலையாகிய வீடு என்பது அவா இல்லாத வாழ்வாகும்; அது மெய்ப்பொருள் ஒன் றையே நாடி விரும்புவதால் வந்து அமையும். து உய்மை என்பது அவா.இன்மை; மற்றது வாஅய்மை வேண்ட வரும் (364) என்பது வள்ளுவர் வாக்கு. அவாஅற்றலைப்பற்றி மேலும் வள்ளுவர் கூறுவது: பற்றற்றவர் எனப்படுவர் அவா அற்றவரே; மனைவி மக்கள் வீடு செல்வம் முதலியவற்றை மட்டும் துறந்தவர் கள் அவ்வளவு தூய்மையாகப் பற்று அற்றவர்கள் அல் லர் (365). ஒருவனை வஞ்சித்துத் துன்ப வாழ்க்கையில் செலுத்துவது அவா என்பதே; ஆகையால் அதற்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்வதே உண்மையான துறவற மாகும். 'ஒருவர் இந்த அவாவைப் பராக்கால் காவா ராயின் அஃது இடமாக அவரறியாமற் புகுந்து பழைய இயற்கையாய் நின்று பிறப்பினை உண்டாக்குதலால் வஞ்சிப்பது என்றார் என்பர் பரிமேலழகர் (366). அவா