பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இல்லாதவர்கட்குத் துன்பம் இல்லை; அவா இருந்தால் எப்படியும் துன்பம் விடாமல் மேன்மேலும் வந்து கொண் டிருக்கும்(368). துன்பத்தில் துன்பம் என்பது அவாவே; அவாக் கெட்டால் இந்த உலக வாழ்க்கையிலும் இன்பம் இடையறாமல் நிற்கும்(369), அவா என்பது எல்லையற்றது; என்றும் நிரம்பாத தன்மையுடையது;விரும்பியது கிடைக்கக் கிடைக்க மேன்மேலும் வேறொன்றை நாடி அலை. யும் தன்மையுடையது; எவ்வளவு கிடைத்தாலும் அமைதி: நல்காதது. டால்ஸ்டாயின் ஆறடிகிலம்’ என்ற சிறுகதை, இந்த அவாவின் தன்மையை நன்கு தெளிவுறுத்த வல்லது. இத்தகைய அவா இருப்பின் வாழ்க்கையில் என்றும் அமைதி கிடைக்காது; ஓயாமல் தேடித்தேடி ஒன்றுவிட்டு: ஒன்று பற்றி அலைய நேரிடும்; அதுவே நரக வாழ்க்கை. அமைதியான இன்பம் நல்கும் வீட்டு வாழ்க்கைக்கு இத்த, கைய அவா இடையூறானது. ஆகையால் என்றும் நிரம் பாத தன்மையுடைய அவாவை நீக்கினால், அப்போதே என்றும் மாறாத அமைதியான வாழ்க்கை வாய்க்கும். அவாவற்ற அந்த நிலையே முக்தி என்பது. "அவாவற்று விடுபெற்ற குருகூர்ச் சடகோபன்’ (திருவாய்-10.10:11). என்ற தொடரை உன்னுக. 3. போரில் அறம் அக்காலத்தில் சான்றோர்கள் உரைத்த அறவுரையின் கனத்தால் போரிலும் அறக்கொள்கை கடைப்பிடிக்கப் பெற்றது. அறக்கொள்கை கடைப்பிடிக்கப் பெறாத போர் களும் நடைபெற்றிருக்கலாம். ஆனால் அவை பற்றிய இலக்கியச் சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. பண்டைத் தமிழ் வேந்தர்கள் போர் செய்யும் திறம் நமக்கு, வியப்பூட்டுவதாகும். போர் செய்கின்றபோதும் போர் தொடங்குகின்றபோதும் இவ்வேந்தர்கள்பால் அறமே தலைசிறந்து நிற்பதைக் காணமுடிகின்றது. போர்குறித்து இருபாலும் மண்டி நிற்கும் வேந்தரை,