பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் } 97 'அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்’ (புறம்-62) என்று கழாத்தலையார் என்னும் சான்றோர் சிறப்பித்துக் கூறுவதைப் புறப்பாட்டில் காணலாம். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழ வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் மண்ணாசையின் விளைவாகப் போருடற்றினர். கழாத்தலையார் என்ற சான்றோர் சேரமான் போர்க்களத்திருப்பதையறிந்து அவனைக் காணச்சென்றார். அவர் சென்று காணும்போது இரு பெரு வேந்தரும் பொருது விழுப்புண்பட்டு வீழ்ந்து கிடந்தனர். சேரமான் உயிர் நீங்குத் தறுவாயிலிருந்தான். புலவர் அவன் புகழ்பாடி வியந்தார். அரசன் தன் கழுத்தி விருந்த ஆரத்தை வழங்கி இறவாப் புகழ்பெற்றான். சிறிது நேரத்தில் அவன் உயிரும் நீங்கியது. இருவரும் வீழ்ந்து கிடத்தலைக் காணுந்தோறும் புலவர் பெருமான் ஆராத் துயரம் எய்தி பாடிய பாட்டே புறம் 62. இதில் 'செரு முனிந்து, அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமும் மாய்ந்தனர்; அவரை நிழல் செய்த குடைகளும் துளங் .கின; அவர்தம் வெற்றியும் குடையும் துவலும் முரச மும் ஒழிந்தன: போர் மறவர் தாமும் எஞ்சாது வீழ்ந் தமையின் அமரும் உடன் வீழ்ந்தது. இவர்தம் பெண் டிரும் பாசடகு மிசைதல், பனிநீர் மூழ்கல் முதலிய கைம்மைச் செயல்களை விரும்பாது, இவர்தம் மார்பகம் பொருந்தி உயிர் துறந்தனர்; இமையா நாட்டத்தவரும் நிறைய விருந்து பெற்றனர்; இவர்தம் புகழ் மேம்படுவ தாகுக' எனப் பாடிச் சிறப்பித்தார். தம்மொடு எதிர் நின்று பொரும் வேந்தன் அஞ்சிய போது அவனோடு பொருவது வீரம் அன்று; போர் அற மும் அன்று. பகை வேந்தர் போந்து தம் அரணை முற் றுகையிட்டுக் காவல் மரத்தைத் தடியக்கண்டும் போர் 176. காவல் மரம் - ஒவ்வொரு வேந்தன் ஒவ்வொரு மரத்தைத் தன் வெற்றியைச் சிறப்பிக்கும்