பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, செய்வதற்கு அஞ்சித் தம் அரணிடத்தே வேந்தர் மடிந்: திருப்பரேல், அவரோடு பொருவது மானம் மிக்க தமிழ். வேந்தர்க்கு நாணுடைச் செயலாகக் கருதப்பெற்றது. இதனை ஆலத்துார் கிழாரின் புறப்பாட்டால் அறியலாம். சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கரு. ஆரை முற்றுகையிட்டு நகர்ப்புறத்திருந்த காவல் மரங் களைத் தன் படை வீரர்களைக் கொண்டு வெட்டுகின் றான். ஊருக்குள் அடைபட்டுக்கிடந்த கருவூர் மன்னன் மரங்கள் வெட்டப்பெறும் ஒசை தன் செவிப்பட்டும். போருக்கு வராது அஞ்சி மடிந்து கிடக்கின்றான். இதனைக் கண்ட புலவர் பெருமான் சோழனை நோக்கி, "தண்ஆன் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து வீகமழ் நெஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரந் தடியும் ஒசை தன்னுTர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை இயம்ப ஆங்கினி திருந்த வேந்தனொடு ஈங்குநின் மரமாக மேற்கொண்டு சிறப்பாக ஒம்பி வருதல்: பண்டைத் தமிழ் வேந்தர் மரபு. அம் மரம் இரவு: பகலாகப் போர் மறவரால் காக்கப்படுவது. குறித்து அதனைக் கடிமரம் என வழங்குவர். அது பகைவற்பாற் சிக்குண்டு வெட்டுப்படாத, வாறு பாதுகாப்பது மானமுடைய வேந்தர்க்கு. மறப்புண்பாகும். வேங்கை, புன்னுை, வேம்பு முதலியன காவல் மரமாகப் பேணி வளர்க்கப் படும் திறம் தொகை நூல்களால் தெளியலாம். இத்தகைய மரத்தைப் போரில் வெற்றிமிகும் வேந்தன் தன் பகை வேந்தன் ஒம்பும் காவல் மரத்தைத் தன் வெற்றிக்குறியாக வெட்டி வீழ்த்துவது போர் மரபு. பரிசிலரும் வேற்றுப் புலத்துப் பெற்ற யானைகளை இக்காவல் மரத் தில் பிணித்து வைப்பது வழக்கம்.