பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் I 99 சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நாணுத்தக வுடைத்தே’’ - -புறம், 36 (தண். குளிர்ச்சி பொருந்திய, ஆன் பொருநை - தாமிர பரணியாறு: கருங்கை - வலிய கை; நவியம்-கோடாலி; பாய்தலின் - வெட்டுதலால்; வீகமழ் - பூ நாறுகின்ற: சினை - கொம்புகள்; காவு - காடு; கடிமனை - அரண் மனை; இயம்ப - ஒலிப்ப; சிலைத்தார் - இந்திர வில்லைப்போன்ற மாலையை யுடைய கறங்க-ஒலிப்ப; மலைத்தனை - பொருதனை) என்று பாடித் தெருட்டுவதைக் காணலாம். பகையும் போரும் இவ்வுலகில் எக்காலத்தும் இருந்து வரும். ஆயினும் பண்டைக்காலப் போர் முறையில் அறம் கடைப்பிடிக்கப்பட்டது. அக்காலத்தில் ஒர் அரசன் மாற்றரசனுக்குரிய நாட்டின்மீது படை எடுக்குங்கால் அந்நாட்டில் வாழும் உயிர்களை எல்லாம் நாசமாக்குவ தில்லை; பசுக்களையும், பார்ப்பார்களையும், பெண்டிரை யும், பிணியாளரையும், இவர் போன்ற பிறரையும் போர் நிகழும் நிலத்தை விட்டுப் புறத்தே போய்விடும்படி எச் சரித்து அவர்களை அகற்றுவான். இத்தகைய அறப் போர் பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்ற புலவர் பாராட்டுகின்றார். "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்(கு) அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும் எம்.அம்பு கடிவிடுதும் நூன்அரண் சேர்மின்’ என அறத்தாறு துவலும் பூட்கை மறத்தின் கொல்களிறு மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி' -புறம், 9.