பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை (பிணியுடையீர் - நோயாளிகள்; இறுக்கும் - செய்யும்; விடுதும் - செலுத்துவோம்; அறத்தாறு - அறநெறி; துவலும் - சொல்லும், பூட்கை - மேற்கோள்; களிறு - யானை, விசும்பு நிழற்றும் - ஆகாயத்தை நிழல் செய் ակւն] . என்று அறப்போர் புரிந்த பாண்டியனைப் புலவர் புகழ்ந்து வாழ்த்துவதைக் காணலாம். இல்லக்கிழத்தியுடன் இயைந்து இன்பமுடன் வாழ் வதற்கு அன்பு இன்றியமையாதது என்பதை அறிவோம். சிலர்மீது பகை கொண்டு ஒருவன் செய்யும் வீரச் செயல் கட்கும் அன்பே காரணமாக அமைந்து விடுகின்றது. வண்ணச்சீறடி மண்மகள் அறியாதவாறு மெல்லியலாய் வாழ்ந்த மங்கை நல்லாளாகிய கற்புக் கடம் பூண்ட கண்ணகி தன் கணவன் கோவலனுடைய புகழைக் காப்ப தற்காகச் சீறி எழுகின்றாள். இதனைக் கவிஞர், பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேண்நிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள் தன்கேள்வனை எங்கணா, என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்,177 (எங்கணா - எவ்விடத்தாய்) என்று கூறுவார். இங்ங்ணம் சீறி எழுந்தவள், பாய்திரை வேவிப் படுபொருள் அறிதி காய்கதிர்ச் செல்வனே: கள்வனோ என் கணவன்?' (பாய்திரை - பரந்த அலை;வேலி - வேலியாகவுடைய) என்று கதிரவனை நோக்கிக் கேட்கின்றாள். அவனும் 177. சிலப். துன்பமாலை - அடி 30 - 33. 178. டிெ டிெ - அடி 50 - 51.