பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்இலக்கியங்களில் அறம சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தம் முத்தி அருவுருவத் தன்மை நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பரிவறநின் றியக்கச் செய்யும் சோதியைமாத் துவெளியை மனதவிழ நிறைவான துரிய வாழ்வைத் தீதில்பர மாம்பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வாம்!! அகர உயிர் எழுத்தனைத்து மாகி வேராய் அமர்ந்ததென அகிலாண்டம் அனைத்து மாகிப் பகர்வனவெல் லாமாகி, அல்ல வாகிப் பரமாகிச் சொல்லரிய பான்மை யாகித் துகளறுசங் கற்பவிகற் பங்க ளெல்லாந் தோயாத அறிவாகிச் சுத்த மாகி, நிகரில்பசு பதியான பொருளை நாடி நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்.2 1. தா. பா: பொருள் வணக்கம்-5 2. டிெ டிெ - 12