பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 20葛

  • நின்கணவன் கள்வன் அல்லன்; இவ்வூரினை ஒள்ளெரி உண்ணும்' என்று மறுமொழி தருகின்றான் கதிரவன். 'ஏழை அழுதகண்ணிர் கூரிய வாளொக்கும் என்பார் கள். செல்வச்செழிப்பில் பிறந்து வளர்ந்து கணவனது போற்றா வொழுக்கங் காரணமாக மதுரை வந்து காற் சிலம்பு விற்கச் சென்ற கணவனை இழந்து கைம்பெண் கோலத்துடன் அழும் கண்ணகி அரற்றிய ஒலம் கல்நெஞ் சத்தையும் கரைக்கும்; உருக்கும்.

ஆறிய கற்புடைக் கண்ணகி சீறிய கற்பினளாகிப் பாண்டியன் சபையில் வழக்குரைத்த திறன் கல்நெஞ்சத். தையும் கரையச் செய்துவிடும். நெஞ்சை நெகிழ்வித்து உருக்கும் அன்பே நெஞ்சை வன்மையுறச் செய்து பகைக் கவும் எதிர்க்கவும் அழிக்கவும் ஆற்றல் அளிக்கின்றது. இந்த உண்மை வள்ளுவரின், அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்: மறத்திற்கும் அஃதே துணை (76) என்ற வாய்மொழிக்கு விளக்கம் தருவதுபோல் அமை கின்றது. “அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாக நிற்கும் என்று சொல்லுவது அறியாமை மறத்திற்கும் (துணிவான வீரச் செயலுக்கும்) அதுவே துணையாகும்.’’ அரண் மனையை விட்டு வெளிவரும் கண்ணகி, மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்' (பட்டாங்கு - உண்மை) என்று சீறுகின்றாள். ஆவேசத்தின் கொடுமுடியில் நின்ற காலத்தும் அறவுணர்வு பிறழாது செயற்படுகின்றாள். தீக்கடவுளை நோக்கி, 179 - சிலப் : வஞ்சினமாலை. அடி-35 - 37.