பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 2 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, பார்ப்பார் அறவோர் பசுபத் திணிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க!' என்று வேண்டுகின்றாள் வீரபத்தினி. நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடலின் சாயல் இதில் எதிரொலிக்கின் றதைக் காண்கின்றோம். மேலும், கண்ணகியின் கருணை யையும் இங்குக் காண்கின்றோம். கண்மூடி வெறி கொள் ளாது கொடியாரையே தேடிக்கொண்டு செல்லுகின்றது பழந்தமிழ் அரசியல் பண்பாட்டில் ஊறி உரம் பெற்ற அவளது திருவுள்ளம். இன்னும் ஓர் அரிய பெருங்கொள்கை பண்டையோ ரிடம் காணப்பெறுகின்றது. போர்க்களத்தில் வீரர் அல். லாதார் மேலும், புறங்காட்டி ஒடுவார் மேலும், முதியோர் இளையோர் மேலும் படைக்கலம் செலுத்தலாகாது என்பது பழந்தமிழர் கொள்கை. இத்தகையோர் மீது படைக்கலம் செலுத்தும் போர் வீரரைப் படைமடம் பட்டோர்’ என்று அறிஞர் பழித்துரைப்பர். வையாவிக் கோப்பெரும் பேகனின் கொடை நலத்தைப்பற்றிச் சான் றோரிடையே ஒர் உரையாடல் நிகழ்ந்தது. அவர்களுள் சிலர் அவன் மஞ்ஞைக்குப் படாம் ஈந்ததும் தன்பால் வரும் இரவலருள் முன் வந்தோர், பின் வந்தோர் என அறியாதும், வல்லார் மாட்டார் எனப் பாகுபாடு செய்யா தும் வரையாது வழங்குவதுபற்றி அவற்கு மடம்பட மொழிந்தனர். அதுகேட்ட பரணர், வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்காற் பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்.பிறர் படைமயக் குறினே’. -புறம், 142 180. சிலப் : வஞ்சினமாலை - அடி 53-55