பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 3 03: (மாரி - மழை, கடாம் - மதம், கழல் - வீரக்கழல்: மடம் - அறியாமை; பிறர்படை மயக்குறின் - பிறர் படை வந்து கலந்து போரிட்டால்; படை மடம் படான் - அப்படையிடத்துத் தான் அறியாமைப் படான்} என்று பாராட்டியிருப்பதைக் காணலாம். இல்லாதவர்க் கும் உள்ளவர்க்கும், கேளாதவர்க்கும் கேட்பவர்க்கும் வரையாது கொடுத்தலே கொடை மடம் எனப்படும். இத்தகையக் கொடைமடம் பேகன்பால் அமைந்திருந்ததே யன்றிப் படைமடம் என்பது அவனிடம் இல்லை என்பது பரணரின் கருத்து. போர் நடைபெறும் பொழுது இன்னாரோடு இன்னார் பொருதல், இன்னார்க்குப் பின் இன்னார் பொருதல் வேண்டும் என்ற முறையும் இருந்தது. வேந்தன் ஏவி. னாலன்றித் தாமே சென்று வீரர் பொரலாகாது என்ற முறையும் இருந்து வந்ததைக் காண முடிகின்றது. பெரும் போர் நிகழுமிடத்து வேந்தர் தாமே முன் சென்று பொரும் முறையும் போர்த்துறைக்கண் காணப் பெறுகின்றன: பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தன்னை எதிர்த்த முடிவேந்தர் இருவரும் குறு. நில மன்னர் ஐவருமாகிய எழுவரும் தோற்றோடுமாறு தான் ஒருவனே வென்ற சிறப்பை நக்கீரர், ஆலம்பேரி சாத்தனார், கல்லாடனார் முதலிய சான்றோர் பலர் புகழ்ந்த பாடல்களில் காணலாம். இவர்களுள் இடைக் குன்றுார்க்கிழார் என்னும் சான்றோர் செழியன் காலத்து இருந்தவர். அவர் இச்செழியன் ஒருவனாய் நின்று பொருது வென்றதை ஒரு பாடலில் (புறம்-76) குறிப்பிடுகின்றார். 'ஒருவரை ஒருவர் அடுதலும், ஒருவருக்கொருவர் தொலை தலும் இவ்வுலகத்தே தொன்று தொட்டு வருவன; அவ்வாறு அடுதலும் தொடுதலும் நிகழுமிடத்து வெற்றி பெற்றோர் பலரும் பலருடைய துணை பெற்று அதனைப் பெற்றது: