பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கேள்வியுற்றுள்ளோமே அல்லது, ஒருவனே துணிந்து நின்று பலராய்க் கூடி எதிர்ப்போரை வென்றது கேட்டிலம். பாண்டியன் ஒருவனாய் நின்று தன் பீடும் செம்மலும் அறி யாமல் எதிர்ந்த எழுவர் நல்வலம் அடங்க வென்றது, இன்றுகாறும் யாம் கேட்டதன்று' என்று வியந்து கூறி யதை இப்பாட்டின் கண் சிறப்பித்துக் கூறியுள்ளதைக் காணலாம். ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்றுஇவ் உலகத் தியற்கை; இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி ஒவியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் தெண்கிணை கறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதா னாகிப் பொருதுகளத்(து) அடலே' (அடுதல் - கொல்லுதல்: தொலைதல் - தோற்றல்; இன்றின் ஊங்கு - இன்றையின் முன்; அரை - தாள்; மா சினை - கொம்பு; மிடைந்து - விரவி; தேம்பாய்தேன்மிக்க; கறங்க - ஒலிப்ப; காண் - காட்சி; திரு - செல்வம்; செழியன் - பாண்டியன்; பீடு - தலைமை; செம்மல் - உயர்ந்த தலைமை; கழல் - வீரக்கழல்; நல் வலம் - நல்லவென்றி, ஒரு தானாகி - ஒருவனாய் நின்று, அடல் - கொல்லுதல்) கான்ற பாடலில் இதனைக் கண்டு மகிழலாம். 181. புறம்- 7.6