பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 205. இராமகதையிலும் அறப்போர் ஒன்றைக் காண் கின்றோம். முதல்நாள் போரில் இராமனும் இராவணனும் போர்க்களத்தில் சந்திக்கின்றனர். இருவரிடையேயும் போர் மிக மும்முரமாக நடை பெறுகின்றது. இதுகாறும் போரில் தோல்வியையே காணாத இராவணனுக்குத் தோல்வி ஏற்படுகின்றது. மணிமுடியை இழந்த இரா வணன் சந்திரனையும் சூரியனையும் இழந்த இரவையும் பகலையும் ஒத்துக் காணப்படுகின்றான். எல்லா உலகத் திலும் உயர்ந்தவன் என்றாலும், ஆற்றல் நன்னெடுங் கவிஞன்ஒர் அங்கதம் உரைப்பப் போற்ற ரும்புகழ், இழந்தபேர் ஒருவனும் போன்றான்' (ஆற்றல் நன்னெடுங் கவிஞன் - வல்லமைபெற்ற நல்ல சிறந்த கவிஞன், அங்கதம் - வசைப் பாட்டு; பேர் ஒருவன்.-- பெருமைபெற்ற ஒருவன்; மிக்க வல்லமைபெற்ற சிறந்த கவிஞன் ஒருவன் வசைப் பாட்டு பாட, அதனால் சீரும் சிறப்பும் வாய்ந்த ஒருவன் அனைத்தையும் இழந்து நிற்பது போல, இராவணன் காட்சி அளிக்கின்றான். அவன் இராமன் முன்பு நிற்கு ம். காட்சியைக் கம்பன், - அறங்க டந்தவர் செயல்இது' என்று உலகெலாம் ஆர்ப்ப நிறங்க ரிந்திட நிலம்விரல் கிளைத்திட நின்றான்; இறங்கு கண்ணினன் எல்அழி முகத்தினன் தலையன்: 182. யுத்த, முதற்பேர்ர் - 249