பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 207 "அறத்தி னாலன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தி னாலரி(து) என்பது மனத்திடை வலித்தி** (அறம் - தருமம்; அமரர் - தேவர்; அருஞ்சமம்-அரிய போர்; கடத்தல் - வெல்லுதல்; மறம் - அதருமம் வலித்தி - உறுதியாகக் கொள்வாய்! : என்று அவனுக்கு அறவுரையும் கூறுகின்றான். தேவர் களாக இருந்தாலும் அக்கிரமத்தால் ஒன்றையும் வெல்ல முடியாது என்பதை மனத்தில் உறுதியாகக் கொள்வா வாயாக!” என்றல்லவோ அறம் வளர்த்த நம்பி இராவன :னுக்கு உபதேசம் செய்கின்றான். இத்துடன் நிறுத்தி விடவில்லை. பின்னுங் கூறுவான் கோசலை நாட்டுடை வள்ளல்: 'இன்னும் போர் செய்ய விரும்பினால் உன்னுடன் இருக்கும் சுற்றத்தாரையும் சேனையையும் சேர்த்துக்கொண்டு நீ சேமித்து வைத் வைத்துள்ள படைபலத்துடன் போருக்கு வருவாயாக; இல்லையேல், எங்காவது போய் ஒளிந்து கொள்க. சிறை வைத்த செல்வியை என்முன் கொண்டு வந்துவிட்டு, உன் தம்பியாகிய வீடணனைத் தேவனாக மதித்து அவனிடம் அரசையும் ஒப்படைத்து விட்டு, நீ அவனுக்கு ஏவல் செய்து கொண்டிரு. இதற்கு நீ ஒருப்படாவிடில் எதிர்த்து நில் ஐயனே! என்று சொல்லி என் எதிர் நின்று ஆவி துறப்பாய். பிழைத்துக் கொள்ளலாம் என்று மட்டிலும் எண்ணம் கொள்ள வேண்டாம்' என்று." இன்னும், ஆளை யாவுனக்(கு) அமைந்தன மாருதம் அறைந்த பூளை யாயின கண்டனை: 184. யுத்த. முதற்போர் - 252 185. யுத்த, முதற்போர் - 253-255.