பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 & தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இன்றுபோய்ப் போர்க்கு நாளைவா: என்று காலத்தையும் கொடுத்து வேறொரு வாய்ப்பையும் தருகின்றான். இவன் அல்லவா. அறம் வளர்த்த நாயகன்? இவ்வாறு எதிரிக்குத் துன்பம் வந்தபோதும் அதனைத் தனது வாழ்வுக்குத் துணையாகக் கொள்ளாது எதிரிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தைத் தருவதல்லவா பேராண்மை? இதனால்தான் கம்பநாடன், மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற் பாலான் இறையவன் இராமன்' (மறைகள் - வேதங்கள்; தேறத்தக்க - ஆராய்ந்து அறி யத் தக்க, இறையவன் - தலைவன்) என்று போற்றுகின்றான் இராமனை. வாலி உயிர்விடுந் தருணத்தில் சுக்ரீவனை அனைத்துக் கொண்டு சில கூறும்போது, பரம்பொருளே அறநெறி நிறுத்துவதற்காகவே இராமனாக அவதரித்துள்ளது என்று. கூறுவான். மறைகளும் முனிவர் யாரும் மலர்மிசை அயனும் மற்றைத் துறைகளின் முடிவும் சொல்லும் துணிபொருள் துணிவில் தூக்கி அறைகழல் இராம னாகி அறநெறி நிறுத்த வந்தது இறையொரு சங்கை இன்றி எண்ணுதி எண்ண மிக்கோய்* 186. டிெ டிெ - 256 187. யுத்த. இந்திரசித்து வதை-51 188, கிட்கிந்தை - வாலிவதை - 132