பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 罗魏盘 (மறைகள் - வேதங்கள்: அயன் - பிரமன், துறைகள்சாத்திரங்கள்: முடிவு - சித்தாந்தம்: துணிபொருள் - தேர்ந்த பொருள், துணி வில் - துண்டிக்கும் வில்: இறை - சிறிது; சங்கை ஐயம்: எண்ணுதி - மனத்திற் கொள்; எண்ணம் - ஆலோசனை! என்ற பாடலில் இதனைக் காணலாம். உயிர் விடுங் காலத்தில் கர்ணனுக்குப் பரஞானம் தட்டுப்பட்டது. போலவே, வாலிக்கும் உயிர் போகுங் காலத்தில் அது தட்டுப்படுகின்றது. எய்ப்புஎன்னை வந்து நலியும்போது அங்கு ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்' [எய்ப்பு - இளைப்பு: கலிதல் - துன்புறுத்தல்; என்று பெரியாழ்வார் கூறும் நிலை இந்த இருவருக்கும் ஏற்படாதது அவன் அருள். சான்றோர்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படக் கூடியவர்கள் சான்றோர். இவர்கள் துறவு நிலையில் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்: நலம் தீங்குகளை ஒப்பாகக் கருதி இரண்டினிடத்தும் உவப்பு வெறுப்பின்றி ஒழுகும் நெறியினர். கணியன் பூங்குன்றனார் ஒரு சான்றோர். அவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள (இப்போது பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம்) மகிபாலன் பட்டி என இப்போது வழங்கும் ஊரைச் சார்ந்தவர், பண்டித மணி மு. கதிரேசன் செட்டியார் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊர் இது. கணியன் பூங்குன்றனார் எத்தகைய வேந்தர்களையும் பாடிற்றிலர். இதனைக் கண்ட அக்காலச் சான்றோர் பலர் வியப்பெய்தி இவரிடம் வந்து பாடு பெறு சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாதது ஏனோ? என்று வினவ, அதற்கு அவர் கூறிய விடை: 189. பெரியாழ். திரு. 4, 10 - 1 த.இ.அ-14