பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗蟹0 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே: வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாதென்றலும் இலமே; மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்; ஆகவின் மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.1% கேளிர் - உறவினர்; அன்ன - ஒப்ப; முனிவு-வெறுப்பு: தண் - குளிர்ந்த; ஆனாது - அமையாது; புனை - மிதவை; முறைவழி - ஊழின் வழி; திறவோர் . நன் மைக் கூறுபாடு அறிவோர்; மாட்சி - நன்மை) என்றஇந்தப் பாடலால் அமைந்தது. "எல்லா ஊரும் எம் ஊர்: எல்லோரும் எம் உறவினர். கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது பிறர் தர வாரா. முன் நியதிப்படி வருகின் றன. நோயும் தானாக வருகின்றது; தானாகவே தீர்கின் றது. இறப்பு ஒரு புதிய நிகழ்ச்சி யன்று. அது கருவில் தோன்றிய காலம் முதல் இருப்பது. ஆதலால் வாழ்க் கையை இனிதென்று உவந்திலம்: வெறுப்பினால் இன்னா தென்று உரைத்ததும் இலம். மழை எப்படிப் பெய்கின் றது? ஏன் பெய்கின்றது? என்ற விவரங்களை யாரும் முன்னரே அறிந்து சொல்ல இயலாது. எப்படியோ மழை பெய்கின்றது; ஆற்றில் வெள்ளம் வருகின்றது. அது போலவே உலகில் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. ஏன் உள்ளன? என்பதை நம்மால் அறுதியிட்டு உரைத்தல் 190, புறம் - 192