பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர்களே, செந்தமிழ்ச் செல்வர்களே வணக்கம். சில ஆண்டுகட்கு முன்னர் நம்மிடையே: வாழ்ந்தவர் டாக்டர் (திருமதி) கிருட்டிணா சஞ்சீவி அவர்கள். கற்றவர்க்கு இனியவராகவும், மற்றவர்க்குப் பெருமையுடையவராகவும், மாணாக்க, மாணாக்கியர்க்கு எல்லோர்க்கும் நல்லவராகவும், நல்லாசிரியையாகவும், 'மனைத் கணவருக்கு வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப தக்க மாண்புடையவளாகித் தற்கொண்டான் வளத்தக் ாள் வாழ்க்கைத் துணை' (குறள்-51) யாகவும் இருந்து நல்வாழ்வு வாழ்ந்தவர் டாக்டர் (திருமதி) கிருட்டினா சஞ்சீவி அவர்கள். இவர்கள் நினைவாகவும், தம் அருமை அன்னையார் திருமதி கண்ணம்மாள் நடேசன் நினை வாகவும் டாக்டர் ந. சஞ்சீவியவர்கள் டாக்டர் (திருமதி) கிருட்டினா சஞ்சீவி - திருமதி கண்ணம்மாள் நடேசன் சொற்பொழிவுத் திட்டம்’ என்ற ஒர் அறக்கட்டளை யைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ளார்கள். இந்தத் திட்டத்தின்கீழ் மூன்று சொற்பொழிவுகள் இ! பல்கலைக்கழகம் எனக்கு அழைப்பு தது. என்ன பொருள் பற்றிப் பேசலாம் என்று அறக்கட்டளை நிறுவிய டாக்டர் சஞ்சீவி அவர்களை யோசனை கேட்டபோது அவர்கள் தமிழ் இலக்கியங் களில்- அறம், நீதி, முறைமை என்ற பொருள் பற்றிப் பேசலாம் என்றார்கள். நல்ல தலைப்புதான். தமிழே. ஒரு பெருங்கடல் மாக்கடலில் எண்ணற்ற வகை மீன் கள் உள்ளன. குறிப்பிட்ட மூன்று வகை மீன்களைப் பிடிக்க வேண்டுமென்றால் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டுமோ அவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும். தமிழ்க்கடலில் அறம், நீதி, முறைமை என்ற தலைப்புகளில் பொருள் சேர்ப்பதற்கு என்னால் இயன்ற அளவு முயன்று கருத்துகளைத் திரட்டி வைத்துக் கொண்டு இன்று உங்கள் முன் வந்து நிற்கின்றேன். தவிர, இந்த,